Connect with us

1 லட்சம் பேரோடு விட்டு விட்டால் போதும் ; அமெரிக்காவின் திமிரா? யதார்த்தமா ?

மருத்துவம்

1 லட்சம் பேரோடு விட்டு விட்டால் போதும் ; அமெரிக்காவின் திமிரா? யதார்த்தமா ?

கொரானா தாக்குதலில் இன்றைய உலக நிலைமை;

204  நாடுகளில்     789866  பேர்  நோய்த்தொற்றிர்க்கு ஆளாகி   38457  பேர் மாண்டிருக்கிறார்கள். 

அனுதினமும் இந்த புள்ளி விபரம் மாறிக்கொண்டே இருக்கிறது.

பொதுவாக மைய ரேகைக்கு மேல் உள்ள   நாடுகள் ஆன குளிர்ப் பிரதேசங்களில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

ஐரோப்பா  அமெரிக்க கண்டங்கள்  அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கின்றன.

அதனால் நோயின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று  மெத்தனமாக இருந்து விட முடியாது.

சீனா விதைத்த உயிரிப்போர் என்று கூட விமர்சனங்கள் வருகின்றன. ஒரு கட்டத்தில் சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டியது.உண்மையை முதலிலேயே சொல்லியிருந்தால் இழப்புகளை குறைத்திருக்கலாம் என்று.

அதிபர் டிரம்பின் வார்த்தைகள் உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

திடீர் என்று  எல்லாரும் மீண்டும் வேலைக்கு  தயாராவோம் என்கிறார்.

எப்படி ? உலகமே தனித்திரு  விலகியிரு  என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரும் வேளையில்  இவர் மட்டும் வேலைக்கு  தயாராவோம் என்கிறாரே என்று பேசுகிறாரே என்று  அவரை திட்டாதவர்கள்  இல்லை.

ஆனாலும் மனிதர் அசரவில்லை. இப்போது நாற்பதாயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் உயிர் இழப்புகள் ஒரு லட்சத்தோடு விட்டால் போதும் என்று  சர்வ சாதாரணமாக சொல்வது எல்லோராலும் முடியாது.

கடின நெஞ்சம் படைத்தவர்கள் மட்டுமே இப்படி  பேச முடியும்.

ஆனாலும் பழைய ஸ்பெயின் ப்ளு போன்ற நோய்களை குறிப்பிட்டு அப்போது ஏற்பட்ட  பல லட்சக் கணக்கான இழப்புகளை விட இது  குறைவுதானே என்று வாதிடுவோர்களும் இருக்கிறார்கள்.

எப்படியானாலும் நாம் நமது கடமையை செய்து தலைமுறையை காப்போம் என்று உறுதியெடுத்து தனித்திருப்போம் , விலகியிருப்போம் .

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மருத்துவம்

To Top