Connect with us

கொரானாவிலும் அரசியல் செய்வது யார் ?

corona

மருத்துவம்

கொரானாவிலும் அரசியல் செய்வது யார் ?

எதிலும் அரசியல் செய்யலாம் என்ற அளவுக்கு இறங்கி விட்டனவா                                 அரசியல் கடசிகள் ?

பிரதமர் மோடி அறிவித்த சுய கட்டுப்பாடு வெற்றிகரமாக நடந்தேறி வருகிறது. கொரானாவின் தாக்குதல் அளவுக்கு அதிகமாக ஆகி மிரட்டி வருகிறது. வருகிற ஏப்ரல் மே மாதங்களில்தான் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 1.75  லட்சம் கோடி நிவாரணம் போதாது என்றும் எல்லாம் முன்பே அறிவித்தவைகளின் தொகுப்புதான் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

குறைந்த பட்சம் ஐந்து லட்சம் கோடியாவது ஒதுக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கோருகிறார்.

மனதோடு பேசிய பிரதமர் மோடி இந்திய மக்களின் மீதுள்ள அக்கறையை நன்றாகவே வெளிப்படுத்தினார்.

அதே நேரத்தில் ஆளும்கட்சி தனது முழு சக்தியை பயன்படுத்தி இத்தகைய சோதனைகளை சந்திக்க மோடி ஒருவரால்தான் முடியும் என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தங்களால் முடிந்த மூன்றாயிரம் கோடி அளவில் திட்டங்களை அறிவித்து விட்டு மத்திய அரசு நான்காயிரம் கோடி தர வேண்டும் என்று முதலிலும் பின்னர் அதிகமாகவும் கோரி கடிதம் ஈழுதுகிறார்.

அதனையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து குறைந்தபட்சம் கான்பரன்ஸ் மூலமாகவாவது எதிர்க்கட்சிகளை கலந்து கொள்ளக்  கூடாதா என்று கேட்கின்றன .

அதற்கெல்லாம் பதில்  சொல்ல ஆளும் கட்சி தயாராக இல்லை.

ஆக எதில்தான் அரசியல் செய்வது  என்பதில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் முட்டி மோதிக். கொண்டிருக்கின்றன.

டெல்லி அரசை உ பி அரசு குற்றம் சொல்கிறது . வெளி மாநில தொழிலாளர்களை வெளியேற்றி பிரச்னையை உருவாக்கு கிறது என்பதாக.

மாறாக கேஜ்ரிவால் உபி அரசு தனது மாநில மக்களை திரும்ப அழைத்துக் கொள்ள ஏன் ஏற்பாடுகள் செய்ய வில்லை என்று கேட்கிறார்.

மராட்டியத்தில் அடைபட்டிருக்கிற ஐநூறு தமிழர்களை திரும்ப கொண்டுவருவதில் பிரச்னை.

இப்படி எல்லா மாநிலங்களிலும் வகை வகை யான பிரச்னைகளை இதுவரை நாம் கண்டதில்லை.

இடையே முஸ்லீம்களை குறிவைத்து முகாம்களில் அடைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு. அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் .வந்தவுடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் சொந்த ஊருக்கு செல்வதால் நோய் பரவும் ஆபத்து அதிகம் என்பதால் அதிகாரிகள் கடுமை காட்டுகிறார்கள்.

பரிதவிப்பில் இருக்கும் மக்களுக்கு அரசியல் செய்ய நேரமில்லை. அவர்களுக்கு இதில் இருந்து தப்பித்தால்  போதும் .

அதை அரசியல் கட்சிகள் உணர்ந்து கொண்டால் போதும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மருத்துவம்

To Top