தமிழக அரசியல்

அக்ரஹாரத்து மருமான் மறக்க வேண்டியதை நினைவுபடுத்தியது ஏன்?

Share

நாம் நினைத்ததை விட ஆழமான சதியின் வெளிப்பாடுதான் அக்ரகாரத்து  மருமானின் பெரியார் சீண்டல் என்று தெரிகிறது.

இதுவரை ஏதோ சோவின் பெருமைகளை பேசத்தான் சேலம் சம்பவத்தையும் அவசர நிலை பிரகடனத்தையும் பேசினார் என்று நம்பினோம்.

ஆனால் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்றும் மறக்க வேண்டிய சம்பவம் என்றும் விளக்கம் சொல்ல வரும்போதுதான் ஏம்ப்பா மறக்க வேண்டியதை நினைவுபடுத்தினாய் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

ஒன்றை எல்லாரும் மறந்து விட்டார்கள். 1971 சம்பவம் தொடர்பாக வழக்குகள் எல்லாம் நடந்து அதில் சோவும் சாட்சி சொல்லி வழக்குகள் முடிக்கப்பட்டு விட்டன. முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் தூசு தட்டி எடுத்து மறுவிசாரணை நடத்த இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?  

மருமானை தூண்டி விட்டது யார்? நீ அவ்வளவு பெரிய அறிவாளியா?

பதில் சொல்ல பெரியார் எழுந்து வர மாட்டார் என்ற துணிவா?

மருமானுக்கு துணிச்சல் இருந்தால் பெரியாரின் வாழ்க்கை முழுதும் அவர் நடத்திய போராட்டங்கள் அத்தனையையும் பற்றி விமர்சிக்க தயாரா? 

அவர் பிறந்த காலத்தில் பார்ப்பார் அல்லாதார் இருந்த பொருளாதார சமூக  நிலைமைகளை பற்றி விரிவாக விவாதிக்க தயாரா?

எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்கள் 95% ஆக்கிரமித்து அடக்கி ஆண்ட புள்ளி விபரங்களை வைத்து விவாதிக்க தயாரா?

கல்வி மறுக்கப்பட்ட நிலையில் இருந்த பார்ப்பனர் அல்லாதோருக்கு திராவிடர் இயக்கம் கொடுத்த ஊக்கமும் நம்பிக்கையையும் பற்றி விவாதிக்க தயாரா?

அடிப்படையில் பெரியார் சாதி ஒழிப்பு  கிளர்ச்சிக்காரர் என்பதையும் ஒழிக்க வேண்டிய சாதிக்கு சனாதன மதமே அடிப்படை என்பதால்தான் அவர் நாத்திகம் பேசினார் என்பதையும் மருமான் அறிவாரா?

இன்று வரை பெரியார் கொள்கைகள் பற்றியோ திராவிடர் இயக்க கொள்கைகள் பற்றியோ  மருமான் வாய் திறக்கவில்லை. திறக்கட்டும் பார்ப்போம்?

This website uses cookies.