தமிழக அரசியல்

கொடுப்பதை தடுக்கும் அற்பர்கள் யார்? நீதிமன்றம் வழி காட்டட்டும்

Share

இன்று திடீர் என்று கொரானாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தனியாரோ அரசியல் கட்சிகளோ அமைப்போ உதவி செய்வது தடை செய்யப்  பட்டிருப்பதாக தொலைக்காட்சியில் செய்து வந்தது அதிர்ச்சி அளிக்கிறது .

ஏன் இந்த தடை?

நிதி கொடுத்தால் அரசிடம் கொடுக்க வேண்டும். பொருள் கொடுத்தால் அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். ஏன் மற்றவர்கள் நேரடியாக                                           தேவைப்படுவோருக்கு கொடுத்தால் என்ன கெட்டுவிடும்?

திமுக , தேமுதிக , கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல கட்சிகள் பொதுமக்களுக்கு                  தேவையான உணவு மற்றும் பொருள்களை விநியோகித்து வருகின்றன. அது மக்களிடையே பெருத்த வரவேற்பை  பெறுகிறது. அது ஆளும்கட்சிக்கு  பிடிக்க வில்லை. உடனே தடை செய்ய முயல்கிறார்கள். என்ன பரந்த உள்ளம் ?

சமையல் செய்யும் இடத்திலோ விநியோகம் செய்யும் இடத்திலோ தொற்று பரவும் அச்சம் இருந்தால் அதற்கென விதிமுறைகளை வகுக்கட்டும்.

இத்தனை பேர்தான் கூடலாம். இத்தனை அளவு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். விநியோகிக்கும் பொது அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதிக்கலாம்.

இதை எதுவுமே செய்யாமல் யாரும் கொடுக்காதே என்றால் இதை செய்து மக்களிடம் எதிர்க்கட்சிகள் நல்ல பெயர் வாங்கிவிடக் கூடாது என்ற குறுகிய  எண்ணத்தில் ஆளும் கட்சி இந்த தடையை விதித்து இருக்கிறது என்ற எண்ணம்தானே பொதுமக்கள் மனதில் வலுப்பெறும்.

இதனால் ஆளும்கட்சிக்குத் தான் கேட்ட பெயர். ஏன் ஆளும்கட்சியும் உதவிகளை செய்யட்டுமே ! அவர்கள்தான் அம்மா உணவகங்களை பயன்படுத்தி  மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்கள்.

அதுவும் ராயபுரத்தில் மக்களுக்கு இலவசமாகவே அம்மா உணவகத்தில் உணவு வழங்கப் படும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.  அதாவது அரசு பணத்தில் உணவளித்து ஆளும் கட்சி நல்ல பெயர் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் எதிர்க்கட்சிகள்  சொந்த பணத்தில் கூட உணவளித்து நல்ல பெயர் வாங்கக் கூடாது என்று தடை விதித்தால் அதை நீதிமன்றம் அனுமதிக்காது என்று நம்புகிறோம்.

திமுக இந்த தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறது.

பார்க்கலாம் எப்படி நீதிமன்றம் வழி காட்டுகிறது என்பதை.!

This website uses cookies.