தமிழக அரசியல்

கொரோனா கொள்முதலில் கோடிக்கணக்கில் இழப்பு! யார் ஈடு செய்வது?

Share

கொரொனா விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஒரு கோடியே நாற்பத்து ஏழு லட்சம் கூடுதல் விலை கொடுத்த வகையில் இழப்பு ஏற்பட்டிருப்பது முதல் கட்ட  ஆய்வில் தெரிகிறது.

திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு கொடுத்த அறிக்கையில் இது தெளிவாகிறது. சத்தீஸ்கர் மாநிலம் ஒரு கருவிக்கு ரூபா 337 என்றும் ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 377.44 எனவும் கொள்முதல் செய்ததாக அம்மாநில அமைச்சரின் டிவீட்டில் தெரிகிறது. அதையே நமது மருத்துவ சேவை கழகத்தின் இயக்குனர் உமாநாத் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்ட கொள்முதல் உத்தரவு நகல் மூலம் ரூபாய் 600 எனவும் ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 672 எனவும் வாங்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதனால் தமிழகம் கூடுதலாக ரூபாய் 294.56 கொடுத்து வாங்கியிருப்பது தெரிய வருகிறது. இந்த விலை மத்திய அரசு நிர்ணயித்ததா நாம் நிர்ணயித்ததா என்பதை தாண்டி கூடுதல் விலை நாம் கொடுத்தோம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இழப்பு யாரால் ஏற்பட்டது? யார் இதை ஈடு காட்டுவது?

இதில் அந்த கருவியை நான்கு லட்சம் அளவில் கொள்முதல் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள்.   தேவை அவ்வளவு இருக்குமா என்பது வேறு.

இப்போது அதே கருவியை பிரிட்டிஷ் அரசு தரம் குறைந்தது என்ற காரணம் காட்டி கொள்முதலை ரத்து செய்து இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அது ஊர்ஜிதமானால் நமது கொள்முதலும் நின்று போகும். ஆக திட்டமிட்டது நடவாது. போகிற போக்கை பார்த்தால் இந்த பிரச்னை இத்தோடு போகும் என்று தெரியவில்லை.

கொரொனா ஊழலையுமா கொண்டு வரும்? விசாரணையில்  நடந்தால் தெரிந்து விடப் போகிறது. பொறுத்திருப்போம். 

This website uses cookies.