தமிழக அரசியல்
வள்ளுவரை வம்புக்கிழுத்து திருத்திக் கொண்ட வெங்கையா நாயுடு.. திருந்த மறுக்கும் பாஜக
வள்ளுவர் தினம் என்பதால் திருவள்ளுவருக்கு வாழ்த்து தெரிவித்த குடி அரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் காவி விபூதியுடன் இருக்கும் வள்ளுவர் படத்தை பதிவிட்டிருந்தார்.
இதற்கு நாடெங்கும் பலத்த கண்டனம் எழுந்தது. அவர் சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்பதால் உடனே அந்த காவி படத்தை அகற்றி விட்டு வழக்கமான படத்தை பதிவிட்டார்.
உடனே பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் அவ்வையார் மோடி படங்களுக்கு காவி திருநீறு அணிவித்து வெளியிட்டிருக்கிறது.
மோடிக்கு காவி அணிவிப்பது உங்கள் விருப்பம்.
வள்ளுவரை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?!
இவர்கள் திருந்த மாட்டார்களா ?
இதற்கெல்லாமா வழக்கு போட முடியும்
மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதில் போட்டி போடுகிறது தமிழக பாஜக!
