கபாலி- வெற்றியா தோல்வியா? வைரமுத்து என்ன சொன்னார்?

Share

நல்லவர்கள் கூட வன்முறையை நாடாமல் வெற்றி பெற முடியாது ??!!

இதுதானே கபாலி கூறும் செய்தி!!!

ரஜினிகாந்த் படம் வெற்றியா தோல்வியா என்று ஒரு பட்டி மன்றமே நடந்து வருகையில் ஒரு  விழாவில் பேசும்போது, கவிஞர் வைரமுத்து   ‘ சில விஷயங்களை விளக்கவோ நியாயப் படுத்தவோ முடியாது  …. காணாமல் போன  ராணுவ விமானம்….  கபாலியின் தோல்வி ..’     என்று பேசி விட்டார்.

பிரச்சினை பெரிதானதும் எனது கருத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம். நானே ரஜினியிடம் விளக்கம் சொல்லி விட்டேன்.  வெற்றி தோல்வி என்று பேசுவதற்கு பதில் தோல்வி என்று மட்டும் வாய் தவறி சொல்லிவிட்டேன்  என்று அறிக்கை விட்டிருக்கிறார்.

வைரமுத்து யார் என்று தெரிந்து விட்டது என்று தாணுவும் சொல்ல ரஜினி மௌனம் காக்கிறார்.

இவர்களுக்குள் இருக்கும் சண்டை இப்படி இருக்க ரஜினியின் அறிக்கையில் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.

வெளியான அன்றே இணையத்திலும் வெளியானது கபாலி.    நீதிமன்ற ஆணை இருந்தும் தடுக்க முடியவில்லை.

ரஜினியிடம் இருக்கும் மவுசு காரணமாக  ரசிகர்களால் படம் வெற்றி பெற்றிருக்கலாம்.     ஆனால் படம் சொல்லும் செய்தி என்ன?

மலேசியாவில் தமிழ் தாதாக்கள் மலேசியா சீன தாதாக்களுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.    அங்கேயும் பலம் இருந்தால்தான் வாழ முடியும். ஓரளவு அங்கே நிலவும் உண்மைகளை படம் பிடிக்கிறது கபாலி.

பிடிக்கிறதோ இல்லையோ , தமிழர் வாழ்வில் ,   ரஜினி திரையில்   தோன்றும்போது ,குடும்பத்தோடு பார்க்கப் பட வேண்டிய வராக நிலைக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

This website uses cookies.