தமிழக அரசியல்

திராவிடத்தை நீர்த்துப் போகச்செய்ய கமலை விட்டு ஆழம் பார்க்கும் பார்ப்பனீயம் ??!!

Share

திராவிட இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது பார்ப்பனீயம் .

ரஜினிகாந்த் அதில் ஒரு பங்கு.    லதாவை திருமணம் செய்து பாதி பார்ப்பனர் ஆனவர் அவர்.    என்றைக்கும் திராவிட இயக்க கொள்கைகளை ஆதரித்து பேசியவர் அல்ல.      சினிமாவில்  கொடி கட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில்  நீடிப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருந்ததில்லை.     ரசிப்போம். கொண்டாடுவோம்.

ஜெயலலிதாவுக்கு எதிராக 1996  ல் குரல் கொடுத்தபோது ஊழலுக்கு எதிரான குரலாக இருந்ததால் எல்லாரும் வரவேற்றார்கள்.    அதற்கும் மேலே எந்த கொள்கைக்கும் சொந்தக்காரராக அவர் தன்னை அடையாளப் படுத்தவில்லை.

தமிழ்நாடு சார்ந்த காவிரி போன்ற பிரச்னைகளிலும் பெரிதாக குரல் கொடுத்ததில்லை.

இப்போது திடீரென்று அரசியல் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.    போர் வந்தால் பார்ப்போம் என்கிறார்.

அடுத்தது கமல்ஹாசன்.

இன்று அவர் உதிர்த்த முத்துக்கள் இவை.

”  ‘   அரசியலுக்கு வந்து விட்டேன்.  கட்சியின் பெயர் முன்பே ஆலோசித்து இருக்கிறேன்.”

‘   திட்டங்கள் கொள்கைகள் குறித்து உடனே சொல்வதற்கு விரும்பவில்லை. இது  ஒரு சிறிய விஷயம்.”

”   முதல் அமைச்சர் ஆக தயாராகவே இருக்கிறேன். கஜானாவை காலியாக வைத்துள்ளனர். மக்கள் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. ஊழலுக்கு மக்களே பொறுப்பு.”

”   இப்போது தேர்தல் வந்தால் நானும் அதில்  களம் இறங்குவேன்.     ”

”    காவி எனது நிறம் அல்ல.   கருப்புக்குள் காவியும் அடக்கம். ‘

”     நான் பசு வதை எதிர்ப்பாளர்களுக்கு எதிரானவன்.”

”     நான் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவன்.    ஆனால் எந்த மதத்துக்கும் கடவுளுக்கும் எதிரானவன் அல்ல.   நல்லது செய்தால் காவி கட்சிகளுடன் கூட பேசுவேன். ”

”  மோடி நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பண மதிப்பு ஒழிப்பு திட்டம் சிறந்த திட்டம்தான். நான் பொருளாதார நிபுணன் அல்ல. எனவே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ”

இப்படி பேசுபவர் பற்றி என்ன முடிவுக்கு மக்கள் வர முடியும். ?

சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் நிலையை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பவர் தான் இப்படி  பேச முடியும்.

பா ஜ க கமலை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வதெல்லாம் நாடகம் என்பதை மக்கள்  அறிய மாட்டார்களா என்ன?

எம் ஜி யார் , ஜெயலலிதா, என்று பார்ப்பன ஆதரவாளர்களிடம் ஆட்சியை கொடுத்து                  திராவிட இயக்கத்தை பாதி ஒழித்து விட்டார்கள்.    மீதி இருப்பதை ரஜினி  , கமல்  என்று புகுத்தி ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

கமல் ஒரு தமிழ் பார்ப்பனர் என்பதால் மட்டும் நாம் இந்த கருத்தை சொல்ல வில்லை.   கமல் என்றாவது சாதி ஒழிப்பை பற்றி பேசி இருக்கிறாரா?      நாத்திகர் என்று சொல்லிக் கொள்கிறார் .  மகிழ்ச்சி.   அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?     மதத்தில் சமத்துவம் நிலவ வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?     இந்து மதத்தில் சமநீதி வேண்டும் என்று பேசி இருக்கிறாரா?        பேசட்டும் . வரவேற்போம்?

கொள்கையையே சொல்லாமல் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன் என்கிறாரே என்ன  கொடுமை இது?      வெறும் சினிமா மோகத்தில்  தமிழ் முட்டாள்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கைதானே?

ஏற்கனெவே அதிமுக என்ற திராவிட இயக்கத்தை பா ஜ க ஊழல்  சிபிஐ. ஐடி  என்றெல்லாம் மிரட்டி பணிய வைத்திருக்கிறது.

இடது சாரி இயக்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கட்சியில் பிராமணர்  ஆதிக்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு  இருக்கிறதா இல்லையா?

தமிழ் நாட்டை தமிழர் தலைவர்களை  ஆள விடக்கூடாது என்று பார்ப்பனீயம் பல வித வேடங்களில் பாடு பட்டுக் கொண்டிருக்கிறது ?

அதற்குத் தகுந்தாற்போல் தகுதியான தமிழர் தலைவர்கள் உருவாக வில்லையே?     யாரை நொந்து கொள்வது?   அவர்களைப் பற்றி அடுத்துப்  பேசுவோம்.

நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் நற்பணி மன்றம் என்று ஊருக்கு ஊர் போர்டு வைத்து கொண்டாடும் இளைஞர் களை பெற்றோர் அடக்கி வைக்கும் நாள் வந்தே ஆக வேண்டும்.

தமிழர்களே கமலை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.!!!

 

This website uses cookies.