தமிழக அரசியல்

பாஜகவில் சூத்திரன் பேசக்கூடாது.. பேசி மாட்டிக் கொண்ட அரசகுமார்?

Share

அரசகுமார் தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர்.

புதிதாக சேர்ந்தவர் ஆதலால் பாஜகவின் நடைமுறைகள் அறியாதவர்.

அதற்கு முன்பு திமுகவில் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்திருக்கிறார்.

எல்லா பாமர மக்களையும் ஈர்க்கும் இந்துத்துவ தத்துவத்தில் ஈடுபாடு கொண்டோ அதிகாரத்தில் மோடி வருவார் என்பதில் நம்பிக்கை கொண்டோ தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டவர்.

சமீபத்தில் புதுக்கோட்டை திருமண நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட அவர் மேடையில்  முக ஸ்டாலினை வைத்துக்கொண்டு தனது திமுக அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர் பிறரைப்போல் அல்லாமல் முறையாக தேர்தல் மூலம்  முதல் அமைச்சராக வர தனது வாழ்த்துக்களை தெரிவித்தவர் கொஞ்சம் கூடுதலாகவே வார்த்தைகளை அள்ளி விட்டு விட்டார்.

விடுவார்களா பார்ப்பனர்கள். உடனேயே துணைத் தலைவர் நரேந்திரனை விட்டு இனி அரசகுமார் பொது நிகழ்ச்சிகளில் பாஜக சார்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று நோட்டிஸ் கொடுத்து விட்டனர்.

இது வேறு யாராவது பேசினால் நடந்து இருக்குமா?

இதையே வேறு யாரும் பேசி இருந்தால் அதிமுக சரியாக இல்லாத நிலையில் திமுகவை உள்ளிழுக்க இது சரியான வியூகம்  என்று பாராட்டி இருப்பார்கள். இதைப் பேச ஒரு சூத்திரனுக்கு நிச்சயம் உரிமை இல்லை என்பதை அவர் அறியமாட்டார்.

முன்பு இதேபோல் சி பி ராதாகிருஷ்ணனும் தான் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.   ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை.   அவர் கொஞ்சம் வலுவானவர்.   நடவடிக்கை  எடுத்தால் கோவையில் கட்சி காணாமல் போகும் அல்லது பலவீனப்பட்டுப் போகும்.  எனவே அடக்கி  வாசித்தார்கள்.

அரசகுமாருக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. தூக்கி  எறிய தயாராகி விட்டார்கள்.

பாஜகவின் உயர் மட்டக் குழுவில் இருந்து கொண்டே நாளும் பொழுதும் மத்திய பாஜக அரசையும்  மோடியையும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார் சுப்பிரமணிய சாமி. அவர் ஒரு பாராளுமன்ற மேலவை உறுப்பினர். நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியாது என்கிறார் அவர். தகுதி இல்லாதவர் என்று யாரை அவர்  கருதினாலும் தயக்க மில்லாமல் கூறக் கூடியவர்.

அவருக்கு எந்த பதவியும் கொடுக்கக் கூடாது என்று தமிழகத்தில்  இருந்து சங்கர மடம் மூலமாக  அப்போது குரல் வந்தது .என்று சொன்னார்கள்.

ஆனாலும் இன்னமும் எந்த பாஜக தலைவரும் சு.சாமிக்கு எதிராக எந்த குரலையும் எழுப்பி விடவில்லை.

இத்தனைக்குப் பிறகும் இனி அரசகுமார் பாஜகவில் இருப்பதை விட பேசாமல் திமுகவுக்கே சென்றுவிடலாம்.

This website uses cookies.