112 பேருக்கு மேல் பலி வாங்கிய வாணவேடிக்கை???!!! காக்கும் தெய்வம் கைவிட்டதா???

Share

கேரளாவின் கொல்லம் பரவூர் தேவி கோவிலில் நடந்த திருவிழாவில் வாணவேடிக்கை நடத்தப்பட்டு அதில் 112 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். நூற்றுகணக்கானோர் படுகாயம் அடைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்த பின்னரும் மீறி வாணவேடிக்கை களை நடத்தும் துணிவை யார் தந்தது?

கைது செய்திருக்கிறார்கள். வழக்கு நடக்கும். தண்டணை கிடைக்குமா தெரியாது.
சட்டமும் வரைமுறைகளும் மீறப்பட்டதாலேயே இந்த விபத்து நடந்திருக்கிறது.
இதில் மனிதர்கள் தான் குற்றவாளிகளே தவிர இறைவனை நிந்திப்பது தவறு என்றாலும் தெய்வம் யாரை தண்டித்திருக்கிறது.என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

மனிதர்கள் மரபுகளை காரணம் காட்டி மனிதர்களை கொல்லுவதை தெய்வம் ஏற்றுக் கொள்ளுமா?
கடும் தண்டனையே எதிர் காலத்தில் இது போன்ற அத்துமீறல்களை கட்டுப் படுத்தும்.

This website uses cookies.