தமிழக அரசியல்

அப்போல்லோவை நோக்கி தவிப்பில் தமிழகம்??!! தத்தளிக்கும் நிர்வாகம் ??!!

Share

சென்ற மாதம் 22 ம் தேதி அப்போல்லோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா இன்றோடு 22 நாட்களாக சிகிச்சையில் தொடர்கிறார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி உமாபாரதி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா ” சொல்ல சொல்ல அதிகாரிகள் தயாரித்ததாக கூறப்பட்ட உரையை தலைமை செயலாளர் படித்தார்.

ஆனால் இதுநாள்வரை முதல்வர் சிகிச்சை பெறும் புகைப்படம் எதுவும் மருத்துவ மனை நிர்வாகமோ அதிகாரிகளோ கட்சிப் பொருப்பாளர்களோ வெளியிடவில்லை.

இந்த மௌனம் எத்தனை வதந்திகளுக்கு விட்டிருக்கிறது தெரியுமா>??    என்னென்னவோ செய்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவியது.    இதை மறுப்பார் யாருமில்லை.   நடவடிக்கை எடுப்பாரும் இல்லை.

அ திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் யார் என்று இன்னமும் தீர்மானம் ஆகாத நிலையில் இப்போது நடப்பது அதிகாரிகளின் ஆட்சியே!!

முதல்வர் இன்று எந்த கூட்டத்திற்கும் தலைமை ஏற்கும் நிலையில் இல்லை.     அவர் தலைமை ஏற்காத எந்தக் கூட்டமும் சட்ட பூர்வ அமைச்சரவைக் கூட்டம் ஆகாது.. எந்த முடிவையும் எடுக்க முடியாது.

பிரச்னையை சமாளிக்கக் கூடிய வகையில் எந்த அமைப்பும் இருக்க வேண்டும் . .   அது கட்சியோ அல்லது ஆட்சியோ எதுவாக இருந்தாலும் தவிர்க்க இயலாத சூழ் நிலையில் சமாளிக்க வேண்டும்.

அந்த நிலையில் அ திமுக இல்லையென்றால்  எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் ஆளட்டும் என்கிறார்.    இந்த மௌனம் கலைய வேண்டும்.

ஜெயலலிதா குணம் பெற்று இல்லம் திரும்பி தனது வழமையான பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எல்லாரின் விருப்பமும்.    அனைத்துக்  கட்சி தலைவர்களும் தங்களது பண்பாட்டை உணர்வை கண்ணியத்துடன் வெளியிட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது.

நாம் இன்னும் முழுமையாக கெட்டு விட வில்லை.    ஆனால் அரசியல் அதிகாரம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ என்ற அச்சமும் எல்லார் மனதிலும் இருக்கிறது.

நீண்ட நாள் முதல்வர் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவ மனை அறிக்கை வெளியிட்ட பிறகு மூத்த அமைச்சர்களின் கடமை என்ன.    ???

கட்சியின் தலைமை கூடி விவாதித்ததாக கூட செய்திகள் இல்லை.

என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக இல்லாத வரையில் எல்லா வதந்திகளும் ரெக்கை கட்டி பறப்பதை யாரும் தடுக்க முடியாது.

ஒரு கட்டத்தில்  மத்திய அரசு கூட தலையிடும் சூழல் வரலாம்.   ரத்தபந்தங்களை ஆட்சி அதிகாரத்தின் பக்கத்தில் விடாமல் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவர்  ஜெயலலிதா.

அவரது அண்ணன் மகள் கூட மருத்துவ  மனையில்  அவரை சந்திக்க முடியவில்லை.

எம்ஜியாருக்கு நடந்தது அவரது வாரிசுக்குமா  என்ற கேள்வி எல்லார மனதிலும் வாட்டுகிறது உண்மை.

அரசியல் முதிர்ச்சி தமிழர்களின்  அடையாளம் என்பது உலகுக்கு நாம்தர வேண்டிய செய்தி.

விலகட்டும் திரை.

 

 

 

This website uses cookies.