அவதூறு வழக்குகள் போடும் ஜெயலலிதா நேரில் ஆஜராவாரா? சட்டம் படும் பாடு?

Share

அரசியல் எதிரிகளை அலைக்கழிக்க அவதூறு வழக்கு போடும் அதிகாரத்தை ஜெயலலிதா தவறாக பயன்படுத்துகிறார்.

ஒவ்வொரு முறையும் ஆட்சியை விட்டு அகலும்போது இந்த வழக்குகளை வாபஸ்  பெறுவது வழக்கம்..

இம்முறை மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டதால் மேலும் மேலும் வழக்குகளை போடுகிறார்.

விஜயகாந்த் போட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் இதற்கெல்லாமா வழக்கு போடுவார்கள் என்று  கேட்டு  விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.

1991 ல் ஜெயலலிதா போட்ட அவதூறு வழக்குகள் 180.      எதுவும் விசாரணையை சந்தித்ததில்லை .

இப்போதும் கலைஞர்   ,விஜயகாந்த்  ஸ்டாலின் , முரசொலி செல்வம் மற்றும் பலர் மீதும் அவதூறு வழக்குகள்.      எதிர்கட்சிக்கள் விமர்சிக்க கூடாதா?

விமர்சனங்களையும் , கண்டனங்களையும் அவதூறாக சித்தரித்தால் யாருமே பேச முடியாது.

அவதூறு வழக்கு போடுபவர்கள்   நீதிமன்றங்களில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற  நிபந்தனை   நிரூபிக்க வில்லை என்றால் செலவின பொறுப்பு போன்ற ஏதாவது ஒரு வகையில் கட்டுப்பாடு  இல்லை என்றால் அரசு அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதில் இருந்து ஜெயலலிதா மாற வாய்ப்பே இல்லை.

உச்சநீதிமன்றம் தான் கட்டுப் படுத்த வேண்டும்.

This website uses cookies.