கெயில் எரி வாயு குழாய்களை விவசாய நிலத்தில்தான் புதைப்போம் !! மத்திய அரசு பிடிவாதம்.??!!

Share

கொச்சின் -பெங்களுரு எரி வாயு குழாய்களை  கேரளத்திலும் கர்நாடகத்திலும் நெடுஞ்சாலைகளில் புதைத்து விட்டு தமிழகத்தில் மட்டும்  ஏழு மாவட்டங்களை சேர்ந்த 2430  விவசாயிகள் பாதிக்கப்படும்  வகையில் விவசாய நிலங்களில்தான் பதிப்போம் என்று அமைச்சர் தர்மேந்திரா பிரதான் நாடாளு மன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

தமிழக அரசும் நெடுஞ்சாலை களில்தான் பதிக்க வேண்டும் என்கிறது.

879     கிலோ மீட்டர் தூரம்  கொண்ட பைப் லைனில்    310  கிலோ மீட்டர் தூரம்தான் தமிழ் நாட்டில் வருகிறது.    ஏன்  தமிழகத்தில்  மட்டும் விவசாய நிலங்களில் பதிக்க வேண்டும்?

கேரளத்திலும் கர்நாடகாவிலும் நெடுஞ்சாலைகளில் பதித்து விட்டு இங்கு மட்டும் ஏன்  நிலங்களில் பதிக்க வேண்டம் என்ற கேள்விக்கு பதிலே இல்லை.

மோடியுடன் நட்புடன் இருக்கும் ஜெயலலிதா பதவியில் இருக்கும்போது தமிழ்நாடு உரிமை இழக்கும் வகையில் நடக்க மாட்டார்கள் என்று நம்புவோம்??!!

ஆனால் இங்குதான் எல்லாமே நடக்குதே ??!!   எது நடந்தாலும்    யாரும் ஆச்சரியப் பட  மாட்டார்கள்.

மோடி- ஜெயலலிதா   இடையேயான சுமுக உறவுக்கு இதுவும் ஒரு சோதனை

This website uses cookies.