ஜெயலலிதா பெயரை சொல்லக்கூடாது-சபாநாயகர் தீர்ப்பு சரியா?! அடிமைத்தனம் என்று விலகும்??!!!

Share

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி ஜால்ராக்கள் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை.

தலைவியை    வானளாவப் புகழ்வதும்   பேசினால் தட தட வென்று மேசையைத் தட்டுவதும்

எதிர் கட்சியினரை மட்டம் தட்டுவதும் இழிவு படுத்துவதும் – அதுதான் அரசியலில் உயர ஒரே வழி என்று நம்புகிறார்கள்.

சட்டப்பேரவையில் ஒரு அதிமுக உறுப்பினர் மாண்புமிகு கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைக்க திமுகவினர் அப்போது நாங்களும் மாண்புமிகு ஜெயலலிதா என்று அழைக்கலாமா என்று கேட்க சபாநாயகர் மாண்புமிகு கருணாநிதி என்று அழைக்கலாம் ஆனால் முதல்வரை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என்று உத்தரவு இட்டுள்ளார்.

புரட்சித்தலைவி என்றும் அம்மா என்றும் ஜெயலலிதாவை அதிமுகவினர் அழைப்பது வழக்கம்.   எப்போது ஜெயலலிதா தன் பெயரை மாற்றிகொண்டார்.

கருணாநிதியை கலைஞர் என்றும் தலைவர் என்றும் திமுகவினர் அழைப்பது வழக்கம்.

ஆனால் தன் பேட்டியில் பலமுறை கருணாநிதி என்று ஸ்டாலின் அழைத்திருக்கிறார். ஒருவரை பெயர் சொல்லி அழைப்பது கூட தமிழ்நாட்டில்தான் பிரச்னை ஆகிறது.

இந்த விவாதம் நல்லதே! தன்னை ‘ நான் பாப்பாத்திதான் ‘ என்று சட்ட மன்றத்தில் சொன்னவர் ஜெயலலிதா.     சாதியை சொல்லி அழைப்பது எப்போதும் வழக்கமில்லை.     ஒருவரை இழிவு படுத்த வேண்டும் என்ற  உணர்வில் சாதியை சொல்லியோ பெயரை சொல்லியோ அழைத்து தன் வெறுப்பை வெளிக்  காட்டிக் கொள்வதை விட இவர்கள் வேறு ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.

சட்டமன்ற விதிமுறை களில் பெயரை சொல்லக் கூடாது என்று  எந்த விதியும்  இல்லை.

ஆக்க பூர்வமான விவாதங்கள் தமிழ் நாட்டில் நடக்க வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம்.

ஆள்கிறோம் என்பதற்காக எவரையும் இழிவு படுத்தும் உரிமை ஆளும்கட்சிக்கு இல்லை என்பதையும் அவரகள் மறக்கக் கூடாது.

This website uses cookies.