தமிழக அரசியல்

உத்தமரா அன்புமணி ராமதாஸ்? சி பி ஐ வழக்கில் சிக்கியவர் மற்றவர்களை குற்றம் சாட்ட முடியுமா? பா ஜ க அரசியலுக்காக சி பி ஐ யை பயன்படுத்துகிறதா?

Share
             குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை வழங்கப் பட்ட ஜெயலலிதா மேன்முறைஈட்டில் இருந்த சட்ட ஒட்டையால் பதவியில் தொடர்கிறார்.
            இதுவரை எந்த வழக்கிலும் தண்டிக்கப்படாத தி மு க தலைவர்  கலைஞரையும் விசாரணையில் இருக்கும் கனிமொழியையும் ஊழல் குற்றச்சாட்டு கூறி பிரசாரம் செய்வது சரி என்றால் இப்போது அன்புமணி மீதும் சி பி ஐ வழக்கில் குற்றச்சாட்டு புனையப்பட்டிருக்கும் நிலையில் அவரும் குற்றம் இழைத்தவர் தானே?
           2004′-2009 ல் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு.    இது ஊழல் வழக்கு இல்லை என்கிறார் அன்புமணி .  ஒரு பைசா கூட வாங்கியதாக வழக்கு இல்லையாம்.   வழக்கே ஊழல் தடுப்பு சட்டதின்படிதான்.  பின்பு எப்படி  ஊழல் வழக்கு இல்லை என்றாகிவிடும்?
             வெறும் நிர்வாக குறைபாடு என்பதெல்லாம் வெளியில் சொல்லலாம்.   விசாரணையில் தீர்ப்பில் அது வெளிப்பட வேண்டும்.
           தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவையும் விசாரணையில் இருக்கிற மற்றவர்களையும் ஒரே தட்டில்  வைத்துப் பார்க்கத் கூடாது என்ற உண்மையை மறக்கலாகாது .
           வழிக்கு கொண்டுவர அன்புமணிக்கு மத்திய அரசு வைக்கும் செக் ஆக இது இருக்குமானால் அது வரும் நாட்களில் மருத்துவர் ராமதாஸ் வெளியிடும் அறிக்கைகளில் வெளிப்படும்..
            கடைசி வரை மத்திய அமைச்சரவையில் நீடித்த அன்புமணி ஈழப் பிரச்சினையிலும் தி மு க வை எந்த வகையிலும் விமர்சிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
              வாய் நீளம் காட்டுபவர்கள் இனி எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

This website uses cookies.