Connect with us

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்ய மறுக்கும் அதிமுக அரசு?!

eps-ops-admk

மதம்

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்ய மறுக்கும் அதிமுக அரசு?!

பாஜகவினருக்கு பயந்து பயிற்சி கொடுத்தும் கூட பணியில் அனைத்து சாதியினரையும் அமர வைக்காமல் தவிர்க்கிறது அதிமுக அரசு.

தவிக்கிறார்கள் அனைத்து சாதியினரும்.

பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் கண்ட கனவு கனவாகவே இருக்கிறது.

கேரளாவில் கூட அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டு விட்டார்கள்.  எண்ணிக்கை முக்கியமல்ல. இன்று இருநூறு பேர். நாளை இரண்டு ஆயிரம் பேர். எதிர்காலத்தில் பூணூல் போடாதவரும் அர்ச்சனை செய்யாத கோவிலே இல்லை என்னும் நிலை உருவாகும். 

பூணூல் போட்டவர் இறைத்தொண்டுதானே செய்கிறார். அதில்தான் மற்றவர்கள் பங்கு கேட்கிறார்கள். கொடுத்து விட்டுப் போகவேண்டியதுதானே.

குறிப்பாக சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் அட்டூழியம் இன்னும் எத்தனை ஆண்டுகள் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதே தெரியவில்லை.

கோவிலுக்கு சென்று முக்குறுணி கணபதிக்கு அர்ச்சனை செய்ய கோரியபோது லதா என்ற பெண்ணை அர்ச்சகர் தர்ஷன் என்பவர் தரக்குறைவாக பேசியதோடு கன்னத்திலும் அறைந்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப் ப்ட்டிருக்கிரரர் தர்ஷன்.

கோவில் மீட்பு போராட்டம் வெற்றி  பெறும் நிலையில் இருந்ததை சுப்பிரமணியன் சாமி தனது உச்சநீதி மன்ற தொடர்புகளை வைத்து ரத்து செய்ய வைத்தார்.

அது அவர்களால் முடிகிறது. இன்று கோவிலை தங்கள் சொந்த சொத்து போலவே அவர்களால் கொள்ளை அடிக்க முடிகிறது.

பாவம் பக்தன். அவனுக்கு இதையெல்லாம் பரிசீலிக்க நேரம் இல்லை. அவனுக்கு அவன் பிரச்னை. அதை இறைவன் தீர்க்க வேண்டும் என்று முறையிடுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாது.

இந்த அப்பாவி பக்தர்கள் தான் அவர்களின் பலம. பக்தன் விழித்துக் கொண்டால்  எல்லாம் சரியாகி விடும்.

இறைவனுக்கும் எனக்கும் இடையில் ஏன் ஒருவன் என்ற கேள்வியை பக்தன் கேட்க ஆரம்பித்து  விட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும்.

சட்டம் தடை போடாத நிலையிலும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பாஜக வுக்கு பயந்து கொண்டு அனைத்து தரப்பினரையும் அர்ச்சகர் ஆக்காமல் வைத்திருக்கும் அதிமுக ஆட்சி வீட்டுக்குப்  போனால்தான் அடுத்த ஆட்சியாவது அந்த வரலாற்று கடமையை செய்யும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top