நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் ஒரு கற்றறிந்தவர் புலமை மிக்கவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவரது அத்து மீறல்கள் அவரது தீர்ப்புகள் சார்ந்து இல்லை. எல்லாம் தனிப்பட்டவை. எனவே விமர்சனம் வரத்தான் செய்யும். கவனமாக இருக்க வேண்டியவர் அவரே. நான் எப்போதும் எவரையும் தனிப்பட்ட விமர்சனம் செய்வதில்லை.
நீதித்துறையின் மாண்பு கெடுகிறது என்ற ஆதங்கத்தில்தான் கருத்து சொல்ல முனைந்தேன். சொன்னதில் பிழை இருந்தால் சுட்டி காட்டலாம் அதை விடுத்து வன்மம் என்று திரித்துக் கூறுவதில் நியாயம் இல்லை. எதையும் எதிர்பார்த்து எப்போதும் நான் செயல்பட்டதில்லை அதற்கு அவசியமும் இல்லை. – வைத்தியலிங்கம்