தமிழக அரசியல்

570 கோடி வங்கிப்பணமா ?? அம்மாவின் ஊழல் பணமா ?? மர்மம் நீடிக்கிறது !!!

Share

திருப்பூர் அருகே மூன்று கன்டைனர்களில் 570 கோடி ரூபாய்  கொண்டு செல்லப்படும்போது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

வியாபாரிகளிடம் ஒரு லட்சம் இரண்டு லட்சம்  பணத்தையெல்லாம் கைப்பற்றி விபரம் சொல்லும் தேர்தல் ஆணையம் இந்த பணத்திற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை.

18  மணி நேரம்  கழிந்த பிறகு ஸ்டேட் பாங்கின் அதிகாரிகள் இந்தப் பணம் கோவையிலிருந்து விசாகப் பட்டணத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்று தெரிவிக் கிறார்கள் .     கலைஞர் பல கேள்விகளை எழுப்பி இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதன் பொருள் இந்தப் பணம் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக இருக்கலாமோ என்று சந்தேகம் எழுப்பப் படுகிறது.

மத்திய அமைச்சர் ஒருவரின் தலையீட்டின் பேரில்தான்  பணம் வங்கிக்கு சொந்தமானது என்று கோரிக்கை வந்தது என்றால் பிரச்சினை மிகப் பெரியது.

நிறுத்தாமல் சென்றது, ரிசர்வ் வங்கி விதிமுறைகள் பின்பற்றப் பட்டதா என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாதது, மிக மிக தாமதமாக வங்கி அதிகாரிகள் உரிமை கோரியது, இரவில் பயணித்தது, ஆவணங்களின் உண்மை நகல்கள் இல்லாமல் இருந்தது எல்லாவற்றிற்கும் மேலாக ஆவணங்களை காட்டி எங்கு  கொண்டு  செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு செல்லாமல் மீண்டும் கோவைக்கே கொண்டு செல்ல வருமான வரி துறை அதிகாரிகள் கடிதம் கொடுப்பது , என்று பல சந்தேக மேகங்கள் சூழ்ந்த மர்மக் கதை போல கதை நீளுகிறது.

தமிழக தேர்தலில் பயன்படுத்தப் படாமல் பாதுகாப்பாய் இருப்பில் வைக்க கொண்டு செல்லப் பட்ட பணம் என்றே பலரும் நம்புகிறார்கள்.

உண்மையாகவே  வங்கிப் பணம் என்றால் ஆவணங்களை காட்டி விசாகப் பட்டணம் போக வேண்டியதுதானே???     பணம் மீண்டும் கோவைக்கே திரும்ப பார்க்கிறது என்றால் விசாரணையை தவிர்க்கத்  தானே ?

முத்தாய்ப்பாக உச்ச நீதி  மன்றம் தலையிட்டு உயர்நீதிமன்றத்திடம் போங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

உயர்நீதிமன்றமும் கைகழுவி விடாமல் உண்மையை கண்டுபிடிக்க உதவுமா ??!!!

 

 

 

This website uses cookies.