தமிழக அரசியல்

வைகோ ஓட்டம்??!! மேலிட உத்தரவா? தமிழர்-தெலுங்கர் மோதலின் தொடக்கமா???

Share

கோவில்பட்டியில் போட்டியில்லை என வேட்பு மனு தாக்கல் செய்யப் போகும்போது அறிவித்து விட்டு மாற்று வேட்பாளரையும் அறிவித்தார்   வைகோ.

ஒரு அணியின்  ஒருங்கிணைப்பாளருக்கு இது அழகா?

தோல்வியை ஒப்புக்கொண்டது போல் தான் இது.

தி மு க  சாதி மோதலை உருவாக்க திட்டமிடுவதாகவும் அதற்கு இடமளிக்காமல் தான் விலகுவதை போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க வைகோ முயற்சிக்கிறார்.

தேவர் சிலைக்கு  மாலை அணிவிக்க இவர் போகும்போது  சிலர் எதிர்த்து கோஷம் போட்டதால் இந்த முடிவை அவர் எடுத்தது உண்மை என்றால்  யாரோ  சிலர் கூச்சல் போட்டால் ஓடிவிடக் கூடிய    கோழையா இவர்.

தேவர் சிலைக்கு நாற்பது ஆண்டுகளாய் தொடர்ந்து மாலை போட்டு வருவது உண்மை என்றால் எதிர்த்து நின்று போராடுவது தானே முறை.

தி மு க வேட்பாளர் தான் தேவர் சாதி  என்று பேசியது வகுப்பு வாதம் என்றால் அவருக்கு எதிராக புகார் கொடுக்கட்டும்.

சீமான்  தமிழ்நாட்டை தமிழர்தான் ஆள வேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறார்.    அதை ஏற்றுக் கொண்டு விஜயகாந்தை முதல்வராக்கும்  கூட்டணி  முடியை வைகோ கைவிடுவாரா?

விஜயகாந்துக்கு இது பின்னடைவுதான்.

தன்னை முதல்வர் வேட்பாளர் ஆக அறிவிக்காத  அதிருப்தியை  இதன் மூலம் வெளிப்படுத்துகிறாரா  வைகோ ?

குழப்பத்தில் தான் எப்போதும் இருப்பார்  என்று சொல்வது உண்மைதானோ?

மீண்டும் போட்டியிடுங்கள் என்று    எல்லோரையும் சொல்ல செய்ய  இது ஒரு தந்திரமா?

கூட்டணி தலைவர்கள் எல்லோருமே தாங்கள் அதிர்ச்சி அடைவதாக சொல்வதன் மூலம் அவர்களிடம் இவர் கலந்து ஆலோசிக்கவில்லை  என்பது தெரிகிறது.

இந்த முடிவு தனது சொந்த கட்சியை பொறுத்தது என்பதால் கூட்டணி தலைவர்களை கலந்து ஆலோசிக்க தேவையில்லை என்பது  சரியாக இருந்தாலும்  , கூட்டணியை அதன் வெற்றி பெறும் என்ற கருத்தை,  இது பாதிக்கும் என்பது வைகோவுக்கு  தெரியாதா ?

கடைசியில்  ,

ஏன் இது   மேலிட உத்தரவாக இருக்கக்கூடாது?

This website uses cookies.