தமிழக அரசியல்

பா. ஜ.க. , அ தி மு க தி மு க, பணம் கொடுக்க முன்வந்தார்கள் – விஜயகாந்த் பரபரப்பு ??!!

Share

ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்கொண்டு  கம்யுனிஸ்டுகளையும் திருமாவளவனையும்  தி மு க பக்கம்  அணைய விடாமல் தடுக்கும் வேலையை வைகோ செய்தார் என்ற குற்றச்சாட்டு வலுவாக இருக்கும்போதே விஜயகாந்தும் வாசனும் அவர்களுடன் சென்று சேர்ந்தனர்.

வெல்லும் வாய்ப்பு அறவே இல்லை என்று  தெரிந்த நிலையிலும் அ தி மு க – தி மு க எதிர்ப்பு நிலையை எடுக்க வேண்டிய அவசியம் ஏன் என்பதற்கு இன்றளவும்  பதில் இல்லை.

வைகோ தன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலே நாம் நிற்பதால் அ தி மு க வந்தால் வந்து விட்டு போகட்டும் என்று பேசினார் என்று அவரது மாவட்ட செயலாளர்களே  குற்றம் சுமத்தி விட்டு வெளியேறினார்கள்.

விஜயகாந்தும் வாசனும் தி மு க -அதிமு க  வுடன் பேரம் படியாததால் கடைசியில் வைகோவுடன் சேர்ந்தவர்கள்.        இல்லாவிட்டால் ஏன் தாமதமாக சேர வேண்டும்?

அப்போதெல்லாம் மெளனமாக இருந்து விட்டு இப்போது எல்லாரும் எனக்கு பணம் தர முன்வந்தார்கள் என்று குற்றம் சாட்டுவது என்ன நியாயம்.?

விஜயகாந்த் சொல்வதில் ஒன்று புரிகிறது.     இவர் பேரத்திற்கு அப்பாற்பட்டவர்  அல்ல .    அப்பாற்பட்டவராக இருந்திருந்தால் அப்போதே அவர் இதனை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று எப்படி உறுதி அளித்தீர்கள் என்ற கேள்விக்கு எப்படி அவர்கள் அரிசி விலையை குறைத்தார்களோ அப்படி குறைப்பேன் என்று விளக்கம் அளித்தவர் விஜயகாந்த்.

எந்தப் பிரச்னை பற்றியும் முழுமையாக கருத்தை வெளிப்படுத்த இயலாதவர்.

தமிழ் நாட்டு அரசியலின் ஜோக்கராக காட்சி அளிக்கும் விஜயகாந்த் தேர்தலுக்கு பிறகு அரசியலை விட்டு விலகுவாரா??

தமிழன் தலைஎழுத்து தகுதி இல்லாதவர்களையும் பண வெறி பிடித்தவர்களையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதா?

ஒதுங்குங்கள் விஜயகாந்த் ??!!

 

 

This website uses cookies.