தமிழக அரசியல்

பார்ப்பனர் வெற்றிக்கு சான்றுகள் – ஜெயலலிதா – மமதா பானர்ஜி – ஓர் ஒப்பாய்வு

Share

ஜெயலலிதா – மமதா இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

இருவரும் பிராமணர்கள் அதாவது பார்ப்பனர்கள்.    ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.     ஊடகங்களும் அதை வெளிப்படுத்தி  எழுத மாட்டார்கள்.  ஆனால் ஜெயலலிதா  மட்டும் ” ஆமாம் , நான் பாப்பாத்திதான் ” என்று சட்ட மன்றத்திலேயே சொல்லிக் கொண்டவர்.

ஊடகங்கள் எல்லோரும் , மற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாதி முத்திரை குத்துவதில் முனைந்து  நிற்பார்கள்.        ஆனால்  பார்ப்பனத் தலைவர்களுக்கு மட்டும் சாதி முத்திரையை தவிர்ப்பார்கள்.

இருவருமே திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.         ஜெயலலிதாவை பற்றியாவது எம்ஜியாரைஇணைத்தும் சோபன் பாபுவோடு இணைத்தும் செய்திகள் வந்தது.    எம் ஜி யார் இறந்த போது தான் உடன்கட்டை ஏறுவதை சிந்தித்ததாக ஜெயலலிதாவே கூறினார்.   ஆனால் மம்தாவை பற்றி அதுபோல் ஏதும் செய்திகள் இல்லை.

இருவருமே ரத்த சொந்தங்கள் யாரையும் அரசியல் அதிகாரத்தில் இணைத்துக் கொள்ள வில்லை.

அதனால்தான்  எனக்கு யார் இருக்கிறார்கள் .    எல்லாமே நீங்கள்தான் என்று பேச ஜெயலலிதாவால்  பேச முடிகிறது.

எம் ஜி ஆரிடம் ஜெயலலிதா கற்றுக் கொண்ட பலவற்றில் இது முக்கியமானது.    அவரும் தன் சொந்தங்களை அரசியலுக்குள் கொண்டு வரவில்லை.

இறந்த போதும் தன் சொத்துக்களை அறக்கட்டளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும்படி செய்து வைத்தார்.

அதனால்தான் அவரை பொன் மனச் செம்மல் என்று அழைத்தார்கள்.

ஜெயலலிதா போல் மம்தாவின் பேரில் சொத்து குவிப்பு என்றெல்லாம் வழக்குகள் இல்லை.  சாரதா மற்றும் நாரதா சிட் பண்ட் ஊழல்களில் மமதா சிக்கவில்லை.    ஜெயலலிதா மூன்று முறை தண்டணை  பெற்றவர்.   இப்போது விடுதலையாகி  அதன் மேலான மேன் முறையீட்டில் விசாரணையில் இருப்பவர்.

இருவரும் அசுரத்தனமாக தங்கள் கட்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப் பவர்கள்.

எட்டி உதைத்தாலும் மிதித்தாலும் யாரும் சத்தம் போட்டு அழுவது கூட இல்லை. ஏனென்றால் மீண்டும் அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு.

ஆனால்  இங்கு  உள்ளது போல் எல்லாரையும் தன் காலில்  விழ  வைத்து அதில் மகிழ்ச்சி காண்பவர் என்ற குற்றச்சாட்டு மமதா பேரில் இல்லை.

யாரை எப்போது தூக்குவார்கள் யாரை எப்போது இறக்குவார்கள் என்பது அவர்கள் இருவருக்குமே  தெரியாது.

எனவே இரும்பு பெண்மணிகள் என்ற முத்திரை இருவர் மீதும் .

எல்லா சாதிகளையும் அடக்கி ஆள்வதில் இருவரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

பணபலம் இருவருக்கும் பொதுவானது.     ஆனால் இங்கு சசிகலா குடும்பத்தினர் இருப்பது போல் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.

மம்தாவை விட ஜெயலலிதாவுக்கு கூடுதல் சிறப்பு ஒன்று உண்டு.

அதுதான் திராவிட இயக்கத்தின் மூல வேரான பிராமணீய எதிர்ப்பு கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தும் தானே பிராமணராக இருந்தும்  அந்த இயக்கத்தின் தலைமையை ஏற்றுக் கொண்டு அதன் மூல வேரை மெல்ல மெல்ல சாகடித்துகொல்லும் பணியை திறம்பட செய்து வருவது.

வெற்றி பெற்றதும் பெரியார் அண்ணா எம்ஜியார் படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அண்ணா வாவது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்.      பெரியார்

நாத்திகராயி ற்றே .   திமுக – அ திமுகவில் உள்ளவர்கள் எல்லாரும் நாத்திகர்கள் அல்ல.

ஆனால் தலைமை தாங்குகிறவர்  சாதி ஒழிப்பில்  நம்பிக்கை கொண்டிருக்க வேண்டுமா இல்லையா?    ஆனால் ஜெயலலிதா   அப்படியா?      அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் உச்ச நீதி மன்றத்தால் செல்லும் என்று தீர்ப்பளிக்கப் பட்ட பிறகும் அர்ச்சகர் பயிற்சி  சான்றிதழ் பெற்றவர்களுக்கு  வேலை கொடுக்க மறுக்கிறாரே?

தமிழர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொள்ள ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.     ஆனால் தமிழர் அல்லாதவரை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள்.   ஏனென்றால் சக தமிழன் வரவில்லையே .   அது போதும் ??!!

எல்லாரையும் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்பதில் இருவருமே கவனம்  செலுத்து பவர்கள்.

பார்ப்பனர்  மீது பொறாமை கொண்டால் மட்டும் போதாது.  பழி சுமத்தினால் மட்டும் போதாது.   அவர்களைப்போலவே தன்னலம்  இல்லாதவர்கள் போல் காட்டிக் கொள்ள தெரிய வேண்டும்.

ரத்த சொந்தங்களுக்கு அதிகார பூர்வமாக  இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

பார்ப்பனர்களை நம்பக் கூடாது என்றாலும்  பொது வாழ்க்கையில் அவர்களைப் பின் பற்றுவதே வெற்றிக்கான வழிகள்.

 

 

 

This website uses cookies.