தமிழக அரசியல்

தடை சட்டம் இருந்தும் கழிவுகளை அள்ளி பலியான 10 மனிதர்கள்??!!!

Share

தடை சட்டம் இருந்தும் சென்னையில்  மட்டும் கடந்த  2010  ல் இருந்து இன்று வரை பத்து பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள் .      ஆம்.    கழிவுகளை அகற்ற மனிதர்கள் மற்றும் திறந்த கழிப்பறை தடை சட்டம்   1993    இயற்றப் பட்டு பின்னர் அது   2003 ல் சாக்கடை இணைப்புகள் செப்டிக் டாங்குகள் பராமரிப்பில் மனிதர்களை ஈடு படுத்துவதை தடை செய்ததுடன் அவர்களின் மறுவாழ்விற்கும்  2013   ம் ஆண்டில் தனி சட்டமும் இயற்றப் பட்டது.

அவர்களை அந்தப் பணியில் ஈடு படுத்துவதை குற்றம் என்று வரையறை செய்த சட்டம் இதுவரை பலியானவர்கள் 10 பேரையும் வேலையில் அமர்த்தியவர்களை தண்டித்ததா???!!!

சென்னைக்கு தேவையான 200     ஜெட் ராடிங் மிஷின்களுக்கு  பதிலாக 142  மிஷின்கள்தான்  இருக்கின்றனவாம்.      பற்றாக்குறைதான் இந்த மனித பலிகளுக்கு காரணம் என்று  தெரிகிறது.

இதற்கு மேயர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.      இன்னும் சொல்ல போனால் தனியார் தேவைகளுக்கு என்று இன்னும் அதிக எண்ணிக்கையில்  மிஷின்கள் தயார் நிலையில் வைக்கப் பட வேண்டும்.

சட்டம் இயற்றினால் மட்டும் போதாது.    அதை அமுல் படுத்தும் சக்தியும் இருந்தால்தான் சட்டத்திற்கு மதிப்பு.

This website uses cookies.