தமிழக அரசியல்

ஜெயலலிதா முதலமைச்சராகி ஜெயிலுக்கு போவாரா ?

Share

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஜூன் ஒன்றாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

விடுதலை உறுதியா மீண்டும் ஜெயிலா என்பது பலத்த விவாதத்துக்கு உரியது.

இப்போது விசாரணையில்  இருப்பது உச்ச நீதி மன்றம்தான்.     விடுவித்தாலும் தண்டித்தாலும் எல்லாருக்கும் தெரிய வேண்டியது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது எழுந்த சந்தேகங்களுக்கான விடைகள்.

உச்சநீதிமன்றத்திலும்  தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக வதந்திகள்.      ஆம்.    ஜெயாவுக்காக வாதாடியவர் இப்போது உச்சநீதி மன்ற நீதிபதி.       திரு நாகேஸ்வரராவ்.

அவர் நினைத்தபடிஎல்லாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழக்குகளை முடிக்க முடிந்திருக்கிறது.    இழுத்தடிக்கவும்  முடிந்திருக்கிறது.      எப்படி நீதித்துறை மீது நம்பிக்கை வரும்.?

நீதி கிடைக்கும் என்பதற்கான கடைசி நம்பிக்கை நீதிமன்றம்.

ஜெயா  வழக்கில் சாதகமோ பாதகமோ ஏற்றுக் கொள்ளத்தக்க  வகையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்பதே எல்லாரின் எதிர்பார்ப்பும்.

ஆனால் குமாரசாமியின்   தீர்ப்பை மட்டுமல்ல குன்ஹாவின் தீர்ப்பையும் நாங்கள் ஆராய்வோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது  பல ஊகங்களுக்கு இடம் கொடுத்து இருக்கிறது.

நாட்டில் நீதிக்கு இடம் உண்டா என்பது தீர்ப்பில் தெரிந்து விடும். .

 

This website uses cookies.