தமிழக அரசியல்

ஆட்சி மாற்றம் நிச்சயம் !!! காட்சி மாற்றம் லட்சியம்!!!

Share

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாளை தெரிய வரும் முடிவில்தான் தமிழகத்தின் தலைஎழுத்து இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப் படும்.

மதுவின் ஆதிக்கம் இல்லாத,    ஊழல் கரை படாத ,     மக்களோடு மக்களாக  கலந்து அவர்களின் துயரங்களை போக்கக்கூடிய ஒரு லட்சிய ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்தகைய ஆட்சியை தி மு க தரும் என்றும் அதன் கடந்த கால தவறுகள் மீண்டும் தலைஎடுக்காது  என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

தமிழக அரசியலையே தூய்மைப் படுத்த வேண்டிய கடமையும் கூட தி மு க வுக்கு உண்டு.

ஏனென்றால் கலைஞர் அடிக்கடி கூறுவது போல் தி மு க ஒரு சாதாரண அரசியல் கட்சி மட்டும் அல்ல.    அது ஒரு சமுதாய இயக்கம்.

திராவிட இயக்க கட்சியையே  ஜெயலலிதா கடத்திக் கொண்டு போய் சனாதனக் கட்சியாக மாற்றி விட்டார்.      அண்ணா கட்சியாகவும் எம் ஜி ஆர் கட்சியாகவும் இல்லாமல் முற்று முழுதாக ஜெயலலிதா வகுத்த  ” கொள்ளையடி ,  பகிர்ந்து கொடு, பதுக்கு ,  வாக்குக்களை விலைக்கு வாங்கு , மீண்டும் கொள்ளையடி ” என்ற  கொள்கைதான் அ தி மு க வின் கொள்கை என்றாகி விட்டது.

கட்சி என்று அம்மா கட்சியானதோ அன்றே அங்கு கொள்கைக்கு இடமில்லை என்றாகி விட்டது.

எப்போதாவது பெரியார்  அண்ணா கொள்கைகளை,  சுயமரியாதை கொள்கைகளை ஜெயலலிதா பேசியதுண்டா ?       பிறந்த  நினைவு  நாட்களில் சம்பிரதாயமான மாலை அணிவித்தல் என்ற சடங்கை தவிர மறந்தும் எங்கும் அவர்களின் கொள்கைகளை  பற்றி ஜெயலலிதா பேசியதே இல்லை.    ஏனென்றால் அவற்றில் அவருக்கு உடன்பாடு இல்லை.   அதை நாணயமாக ஒப்புக்கொள்ளும் தைரியமும் அவருக்கு இருந்தது இல்லை.

தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஆற்றல் தி மு க வுக்கு உண்டு.    அதிலும் குறிப்பாக ஸ்டாலின் தற்கால தலைமுறை தலைவர்கள் வரிசையில் கண்ணியம் மிக்க தலைவராக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார் .

நம்பிக்கைதான் வாழ்க்கை!       நாளை விடியும் என்று நம்புவோம்??!!!

,

 

This website uses cookies.