Latest News

அ.தி.மு.க வை மிரட்டுகிறதா மோடி அரசு? ராம் மோகன் ராவின் பேட்டி தரும் பொருள் என்ன?

Share

வருமானத் வரித்  துறையின் நடவடிக்கைக்கு ஆளாகி இன்று பதவி இழந்து நிற்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று கொடுத்திருக்கும் பேட்டி தமிழக அரசியலில் ஒரு திருப்பம்.

ஸ்டாலின் சொன்னது போல் இதில் ஏதோ பெரிய மர்மம் இருப்பதைப்போல்தான் தெரிகிறது.

முப்பது லட்சம் பணம் ரொக்கம் தங்கக் கட்டிகள் என்றெல்லாம் வந்த செய்திகளுக்கு மாறாக இன்று ராம் மோகன் ராவ் தனது வீட்டில் கைப்பற்றியது வெறும் ஒரு லட்சம் ரூபாய்தான் என்றும் மனைவி அணிந்திருந்த நகைகள் மட்டும்தான் என்றும் சொல்லியிருப்பது சரியா என்று தமிழக மக்கள் குழம்பி இருக்கிறார்கள்.

ஓ பி எஸ் யும் மத்திய அரசையும் நேரடியாகவே வம்புக்கு இழுத்திருக்கிறார்.

தலைமை செயலாளரின் அறையில் நடந்த சோதனையை தடுத்து நிறுத்த அரசுக்கு தைரியம் வர வில்லை என்றும் என்னை இட மாற்றம் செய்யும் தைரியம் கூட மத்திய அரசுக்கு இல்லை என்றும் தெளிவாக சவால் விடுகிறார்.

நாளை ஓ பி எஸ் மற்றும் மத்திய அரசின் சார்பில் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய  அளவில் இவரது  பேட்டி இருக்கிறது.

நாளை  மறுநாள் சசிகலா அ தி மு க பொது செயலாளராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

ஒரு கோடிக்கு மேல் உறுப்பினர்களை கொண்ட கட்சி ,  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு , ஏதோ அனாதையாக கிடப்பதைப் போலவும் அதை ஏதாவது செய்து ஆதாயம் அடைய முடியுமா என்று தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பா ஜ க திட்டமிட்டு செயலாற்றி  வருகிறது.

ஜெயலலிதா இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்ற அவரது கூற்று உண்மையாக இருந்தாலும் அதை இவர் இப்போது சொல்வதற்கு காரணம் வேறு.      தன்  தவறுகளுக்கு அவரையும் கூட்டு சேர்க்கிறார்.

சசிகலா அனுமதி பெற்று பேசியிருப்பாரா அல்லது தானே தனது முடிவாக பேசினாரா என்பது தெரியவில்லை.

அரசியலுக்கு வரும் எண்ணமும் இருக்கும்போல்  தெரிகிறது.

எப்படி இருந்தாலும் ஓ  பி எஸ் சும் வருமான   வரித்துறையும் விளக்கம் கொடுக்காமல் இந்தப் பிரச்சினை  தீரப்  போவதில்லை.

முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.

வரும் நாட்களில்  வாணவேடிக்கை கோலோச்சும்.     அதில் தோலுரியப் போவது மத்திய அரசா அல்லது சசிகலாவின் அ தி மு கவா  என்பதும்  வெளிச்சமாகும் .

 

This website uses cookies.