Latest News

இரட்டை இலை சின்னம் ; தேர்தல் கமிஷன் அரசியல் செய்யுமா நடுநிலை வகிக்குமா ?

Share

ஏழு லட்சம் அவிடவிட்டுகள் சசிகலா பொதுசெயலாளர் என்றும் தினகரன் துணை பொது செயலாளர் என்றும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

அது செல்லாது  என்றும் ஜெயலலிதா நியமித்த பொறுப்புகள் மட்டுமே செல்லும் என்றும் ஓ  பி எஸ் மூன்றரை லட்சம் அவிடவிட்டுகளை தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் ஓ பி எஸ் அவிடவிட்டுகளை வாபஸ் பெற்றால் தினகரன் தரப்பு அவிடவிட்டுகள் மட்டுமே செல்லும்.   தினகரன்  தரப்பு பிரிந்தபின் எடப்பாடி தரப்பு முந்தைய அவிடவிட்டுகளை எப்படி வாபஸ் பெற முடியும்.?   ஆட்சேபணை தெரிவித்து தினகரன் தரப்பு மனுகொடுத்திருக்கும்  நிலையில்  தேர்தல் கமிஷன் எப்படி உடனடியாக முடிவெடுக்க முடியும்?

எல்லார் சார்பிலும் நான்கைந்து பேர் வாபஸ் பெற முடியுமா?

பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு என்று பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் பா ஜ க சொல்கிறபடி வேலை செய்கிறது என்பது பரவலான குற்றச்சாட்டு.

நடக்கும் நாடகம் அனைத்துமே பா ஜ க வின் அரசியல் சித்து விளையாட்டு.

கொஞ்ச காலத்தில்  எடப்பாடி  ஓ பி எஸ் அனைவருமே பா ஜ க வில் சங்கமம் ஆனால் கூட வியக்க ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு காரியங்கள் நடக்கின்றன.

இன்று வரை இரு தரப்பும்  தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ய கூட தேர்தல் கமிஷனுக்கு நேரமில்லை.   எந்த முடிவையும் எடுக்கவுமில்லை.  .

தான் சுயமாக முடிவெடுக்கும் நிறுவனம் என்பதை தேர்தல் கமிஷன் நிரூபிக்க வில்லை.

எனவே பா ஜ க வுக்கு எது சாதகமோ அந்த முடிவைத்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் எடுக்கும் .

தமிழகத்தின்  தலை எழுத்தை இந்திக்கார்கள்  நிர்ணயிக்கும் நிலை வந்ததே என்று நாணி தலை குனியும் நேரமிது.

குனிந்து பயனில்லை.   தலை நிமிர்ந்து சிந்திக்கட்டும் தமிழினம்.

This website uses cookies.