Connect with us

மானம் போகிறது , தீக்குளிக்காதே தமிழனே???!!!

theekkulipu

Latest News

மானம் போகிறது , தீக்குளிக்காதே தமிழனே???!!!

ஜெயலலிதா மீண்டு வருவார்.   மீண்டும் வருவார்.    அரியணையில் மீண்டும் அமர்வார்.   மருத்துவர்கள் தரும் அறிக்கை அந்த நம்பிக்கையைத் தான் தருகிறது.

போதாது என்பவர்கள் வசதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப பலவிதமான வழிபாடுகளை  செய்து  அவைகளை பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாவம் அப்பாவித் தொண்டர்கள்தான் தங்கள் தலைவியின் நிலைமையைப் பொறுத்துக்  கொள்ள முடியாமல் தங்களையே மாய்த்துக் கொண்டிருகிறார்கள்.

முன்பே பல சமயங்களில் ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் தங்களை மாய்த்துக் கொண்ட குடும்பங்கள் படும் பாட்டை யார் ஆவணப் படுத்தி இருக்கிறார்கள். ?

ஜெயலலிதா சிறையிலிருந்து மீண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.     உயிர்  கொடுத்த தொண்டர்களின் குடும்பங்கள் மூன்று லட்சம் நிவாரணத் தொகையை வாங்கி கொண்டு தற்காலிக உதவியுடன் நெடிய துன்பத்துக்கு ஆளாகி நின்றார்கள்.

குடும்பத் தலைவனின் இழப்பை எந்த நிவாரணம்தான் ஈடு செய்ய முடியும்?

பாசமும் ஈடுபாடும் தலைவர்கள் மீது வைப்பது தவறல்ல.

நேற்று தீக்குளித்து இறந்த அ தி மு க தொண்டர் சற்குணம் வயது 31. மனைவியும் மகளும் இருக்கிறார்கள்.    எந்த நிவாரணம் அந்த தாயின் துயரத்தை மகளின் பரிதவிப்பை ஈடு செய்ய முடியும்.   ?    மோட்டார் சைக்கிளில் வந்து நடு ரோட்டில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக்  கொண்டு முதல் அமைச்சர் குணமடைய வேண்டும் என்று கத்திக்கொண்டே உயிர் இழந்திருக்கிறார்.

மதுரை உத்தபுரம் ராஜவேல் அதிமுக தொண்டர் 21  வயது. மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து இறந்திருக்கிறார்.    அவர் குடும்பம் எந்த இழப்பீடால் நிவாரணம் அடையும்.?

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் போது உயிர் துறந்த 21  த மிழர்களின்

தியாகம் கையறு நிலையில் நிகழ்ந்தது.    அதுவே தவறுதான்.

திலீபன் நீர் கூட அருந்தாமல் உயிர்த்தியாகம் செய்தது ஒருவகை போராட்டம்.

இப்போது மிகச் சிறந்த மருத்துவர்கள் தீவிரமாக உழைத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

தொண்டர்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது.

எனவே நம்பிக்கையுடன் காத்திருப்பதே தொண்டர்கள் என்பதை தாண்டி தமிழர்கள் என்ற வகையில் நம் கடமை என்பதை அதிமுக தொண்டர்கள் நினைவில் கொன்வது.

ஆங்காங்கே உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களை கட்டுப் படுத்தும் கடமை இருக்கிறது.

எந்த நிலையிலும் போராட வேண்டும்.   பிரார்த்திக்க வேண்டும்.   நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும்.   அவர்களின் புகழுக்கு மாசு ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.

அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.     தங்கள் குடும்பம் என்ன பாடு படும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழர் மானத்தை காக்க வேண்டும் என்ற உணர்வும் வேண்டும்.

இறைவன்  எல்லாருக்கும்  நற்சிந்தனையை  நல்குவானாக???!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top