Connect with us

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக யார் காரணம்? ஆளப்போவது அதிகாரிகளா ? மக்கள் பிரதிநிதிகளா?

local election in tamilnadu

தமிழக அரசியல்

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக யார் காரணம்? ஆளப்போவது அதிகாரிகளா ? மக்கள் பிரதிநிதிகளா?

பல காரணங்களுக்காக உள்ளாட்சி தேர்தலை உயர் நீதி  மன்றம் தள்ளி வைத்து விட்டு டிசம்பருக்குள் மீண்டும் நடத்த உத்தரவிட்டிருக்கிறது.

விதிப்படி இரண்டு அறிவிக்கை களுக்கு பதிலாக ஒரு அறிக்கை மட்டுமே வெளியிட்டது தேர்தல் ஆணையம்.      முதல் நாள் நள்ளிரவில் அறிக்கை வெளியிட்ட பிறகு அடுத்த நாளே ஆளும் கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது.     எதிர்கட்சிகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை. மாவட்ட அரசிதழில் மட்டும் அறிக்கை வெளியிட்டு விட்டு தமிழ்நாடு அரசிதழில் ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தது நீதிமன்றம். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை  தவிர்க்க கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.     இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் என்ன பதில் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.    ஒன்று  மட்டும் நிச்சயம்.   அறிவித்த அறிவிப்பு ஆளும் கட்சியின் தாக்கீதில் வெளியிடப் பட்ட ஒன்று.

எஸ் டி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வில்லை என்று மட்டும்தான் திமு க மனுபோட்டது.    ஆனால் நீதிமன்றம் பல காரணங்களை ஆராய்ந்து தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

இருபது கோடி ரூபாய் தண்டச் செலவு என்பது மட்டுமின்றி எத்தனை குழப்பங்கள்.?

பொதுத் தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல்கள் மிகவும் அதிகார மிக்கவை யாக மாறி விட்டன.     கோடிக்கணக்கில் வரவு செலவு மட்டுமின்றி கட்டுமான அனுமதிகள் தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதில் கோடிக்கணக்கில் நடக்கும் பேரங்கள் அதிகரித்து  விட்டதுதான் போட்டிகள் அதிகரித்த தற்கு காரணம்.

சென்னையை சுற்றி நடந்த பல கொலைகளுக்கு இந்த ரியல் எஸ்டேட் பேரங்கள் தான் காரணம் .

1991 ல் தாழ்த்தப்  பட்ட ஒருவர் கூட இல்லாத வார்டை தாழ்த்தப்பட்டோர் தொகுதியாக அறிவித்ததை எதிர்த்து திமுக தடை வாங்க அதை காரணம் காட்டியே ஐந்தாண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்தவில்லை.

2011 லும் திமுக நீதிமன்றம் சென்றபோது ஏன் முன்கூட்டியே ஆணையத்திடம் புகார் தெரிவிக்கவில்லை என்று தடை விதிக்க மறுத்து  விட்டதால்  இந்தாண்டு முன்கூட்டியே தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தது திமுக.   ஆனால் ஆணையம் கட்சிகளை கலந்து ஆலோசிக்க மறுத்து விட்டது.

எனவே இந்த தடைக்கு முற்று முழுதாக தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

முதல்வர்  உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் நேரத்தில் முடிவெடுப்பது யார்.?

இரண்டு மாதத்தில் தேர்தல் வருமா?   அதிகாரிகள் ஆட்சியே தொடரட்டும் என்று ஆளும் கட்சி விட்டு விடுமா ??

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top