Connect with us

பழைய நோட்டுகளை வைத்திருந்தால் குற்றம்- மோடி அரசின் துக்ளக் தர்பார் சட்டம் ??!!

modi

Latest News

பழைய நோட்டுகளை வைத்திருந்தால் குற்றம்- மோடி அரசின் துக்ளக் தர்பார் சட்டம் ??!!

மார்ச் 31,2017 வரை செல்லாத ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு இப்போது அவசர சட்டம் மூலம் செல்லாத நோட்டுகளை வைத்திருந்தால் நான்கு வருட சிறை தண்டணை என்று துக்ளக் தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

உலகில் எங்காவது இப்படி ஒரு அறிவுக்கு பொருத்தமில்லாத சட்டம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

செல்லாத நோட்டு குப்பை காகிதம்.     அதை பயன்படுத்த  முடியாத  போது வைத்திருப்பது மட்டுமே எப்படி குற்றமாகும். ?     பத்து நோட்டுகளை வைத்திருக்கலாம்  நினைவுச் சின்னமாக என்று அரசு அனுமதிக்கிறது.

அதிகம் இருந்தால் அழித்து விடுங்கள் என்று அரசு சொல்கிறதா?    அப்படி வைத்திருப்பதில் எந்த பயனும் யாருக்கும் இல்லை.   யாருக்கும் நட்டமும் இல்லை.    யாருக்கும் நட்டமிழைக்க முடியாத நோட்டுகளால் என்ன ஆபத்து வந்து விடும்.      அப்படி வைத்திருக்க யாருக்கும் எந்த காரணமும் இல்லை.

தேவையே இல்லாமல் ஒரு சட்டத்தை போடுவதால் இந்த அரசு என்ன சொல்ல நினைக்கிறது. ?

கருப்பு பண ஒழிப்பு, கள்ள பண ஒழிப்பு , தீவிரவாத குழுக்கள் ஒழிப்பு  எல்லாம் போய் இப்போது பணமில்லா பரிவர்த்தனை என்ற புதிய கோஷத்தை தூக்கிப் பிடிக்கிறது மோடி அரசு .

எதையும் யாரும் எதிர்க்க வில்லை.   திட்டமில்லாமல் பொதுமக்களை  வாட்டி வதைக்கும் இந்தசெல்லாத நோட்டு திட்டத்திற்கும்     பணமில்லா பரிவர்தனைக்கும் என்ன தொடர்பு?

கானா, நைஜீரியா , மியான்மர், சோவியத்யூனியன் ,      ஸைரே, ஜிம்பாப்வே, வட கொரியா, வெனிசூலா, போன்ற நாடுகள் இதே மாதிரி நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமால் தோல்வியடைந்தன.

ஐரோப்பா யூனியன் நாடுகள் பனிரெண்டு ஒன்று சேர்ந்து புதிய யுரோ நோட்டுகளை மூன்றாண்டுகள் திட்டமிட்டு அமுல்படுதியபோது அது வெற்றி யடைந்தது.    அதுமாதிரியான திட்டமிடல் இங்கு இல்லை.

பாகிஸ்தான் அடுத்த ஆண்டு முதல்  பழைய நோட்டுகளுக்கு பதில்  புதிய நோட்டுகளை  அச்சடித்து வைத்துக் கொண்டு அறிமுக படுத்த  இருக்கிறது.

கருப்பு பணம் ஒழிக்கவே முடியாத ஒன்று.        பழைய ஆயிரம் ரூபாய் கருப்பு பணம் இனி மேல் இரண்டாயிரம்  ரூபாய் கருப்பு  பணமாக மாறும்.

கள்ளப் பணமும் இனி இரண்டாயிரம் நோட்டுகளாக வரும்.     தொடர்ந்து போராடி அவைகளை ஒழிக்க முயற்சிப்பதே ஒரே வழி.

மொத்தம் 15.4  லட்சம் கோடி ஆயிரம் ஐநூறு நோட்டுகளில் இப்போது வங்கிகளில் டிபாசிட் செய்யப் பட்டிருப்பது   14  லட்சம் கோடி என்றால் மிச்சம் 1.4 லட்சம் கோடிதான் வரவேண்டும்.    வரலாம் அல்லது வராமல் போகலாம்.

வந்திருப்பதில் எவ்வளவு வெள்ளை பணம் எவ்வளவு  கருப்பு பணம் என்பதை எல்லா கணக்குகளையும் ஆராந்தால்தான் தெரியும் .

வருமான வரி சட்டத்திலேயே பெரிய துகைகள் கொண்ட பரிவர்த்தனைகளை காசோலை அல்லது வங்கி ஓலை மூலமாகவே மட்டுமே செய்ய முடியும் என்ற உள்ளதை அமுல் படுத்தினாலே இந்த செல்லாத நோட்டு அறிவுப்புக்கு தேவையே இருந்திருக்காது.

காபி குடிக்கவும் பூ வாங்கவும் பஸ் ரயில் டிக்கட்எடுக்கவும் கார்டு மூலமாக செய்ய என்ன அவசியம் இருக்கிறது. ?

போகிற போக்கை பார்த்தால் ஒரு நிலையில் மோடி அரசு தொடர்ந்து கேட்ட பெயர் வாங்கி கொண்டு  இருக்கிற நிலையில் ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி நிலையை அவர் அமுல்படுத்தினாலும் ஆச்சரியப் பட முடியாது.

ஒருவேளை உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டதை போல் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில்  இறங்கினால் அரசியல் நெருக்கடி  நிலையை அமுல் படுத்த கூட மோடி தயங்க மாட்டார்.

மக்கள் படும் துயரங்களை உணர முடியாத அல்லது உணர விரும்பாத பிரதமரை நாம் பெற்றிருப்பது காலத்தின் கோலம.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top