மாவீரர் நாள்! தமிழர் நெஞ்சங்களில் வாழும் பிரபாகரன் வழியில் உரையாற்றும் நாள் வருமா?

மாவீரர் நாள்! தமிழர் நெஞ்சங்களில் வாழும் பிரபாகரன் வழியில் உரையாற்றும் நாள் வருமா?

ஆண்டிற்கொருமுறை உலக மக்களுக்கு மாவீரர் தினத்தன்று பிரபாகரன் உரையாற்றுவார்.
தெளிவான கொள்கை முழக்க உரையாக அது அமையும்
அவருக்கு உரிய மரியாதையை தமிழுலகம் தரவில்லையே என்ற ஏக்கம்தான் மேலிடுகிறது.
தமிழ்த்தாயின் தீர மகன்!
பொன் பொருள் பதவி செல்வம் சுற்றம் ஏதும் அவரது
விடுதலை வேட்கையை இறுதிவரை குலைத்ததில்லை .
அவரது படம் சுபாஷ் சந்திர போஸ் போன்று ஏன் அதைவிட மேலாக கூட எ ல்லா தமிழர் இல்லங்களையும் அலங்கரிக்க வேண்டும்.
வருங்கால தலைமுறைக்கு சமுதாயத்துக்கு உழைக்க வருகிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் வாழ்க்கையாகவே வாழ்ந்து காட்டி விட்டார்.
அவருடைய லட்சியம் என்பது இன்று உலகத்தமிழர்
லட்சியம்.
விவாதத்துக்கே இடமில்லாத வகையில் மரியாதைக்கு உரிய தமிழ்த்தாயின் தீர மகனுக்கு வீர வணக்கங்கள்.