Connect with us

உள்ளூர் முஸ்லிம் டி எஸ் பியை அடித்தே கொன்ற காஷ்மிரி முஸ்லிம்கள்?!

Latest News

உள்ளூர் முஸ்லிம் டி எஸ் பியை அடித்தே கொன்ற காஷ்மிரி முஸ்லிம்கள்?!

காஷ்மீர் –  எரிந்து கொண்டிருக்கும் குளிர்ப்பிரதேசம் .

ஹுரியத் அமைப்பின் இரண்டு பிரிவுகள் சையது அலி ஷா ஜீலானி மற்றும் மிர்வாயிஸ் உமர்  பாருக் தலைமைகளில்.   யாசின் மாலிக்கின் ஜெ கே எல் எப் மூன்றாவது சக்தி.   எந்த தீவிரவாதி  கொல்லப்பட்டாலும் பந்த் அறிவிப்பது இவர்கள் வழக்கம்.

பாகிஸ்தானின் தூண்டுதலில் செயல்படும் சக்திகள் எப்போதும் தீவிர மாகவே இயங்கி வருகிறது.

மக்கள் இந்தியா பக்கம் இருக்கிறார்களா?      தங்களை இந்தியர்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்களா?

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி.  எனவே அதில் வசிக்கும் மக்கள் இந்தியர்களே.   அவர்கள்  இந்துக்களோ முஸ்லிம்களோ அது கணக்கல்ல.

தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆரம்பிக்கப் பட்டதேசிய மாநாட்டுக் கட்சி வாக்குரிமை தீர்மானிக்கட்டும் என்கிறது.

இடையில் பாகிஸ்தான் தன்  ஆயுதக்  குழுக்களை அனுப்பி சண்டையை வளர்த்து வருகிறது.

ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலை நடத்த முடியவில்லை தேர்தல் கமிஷனால்.

ஐந்து முதல் பத்து சதம் மக்கள்தான் ஓட்டுப போட வருகிறார்கள்.

பிரிவினை சக்திகள் எந்தளவு வளர்ந்திருக்கிறார்கள் ?

முஹமத் அயூப் பண்டித் உள்ளுர்காரர்.    டி எஸ் பி யாக பணிபுரிகிறார்.   புகழ் பெற்ற ஜாமியா மசூதியின் பாதுகாப்பிற்கு சென்றார்.   கூட இருந்து பாதுகாவலர்களை  அனுப்பி விட்டு இந்தியாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்களை படம் பிடிக்கிறார்.    உடனே அங்கே இருந்த கூட்டம் அவரை உடையை களைந்து விட்டு கற்களாலும் தடிகளாலும்  தாக்கத் துவங்கு கிறார்கள்.     சாகும் வரை அடிக்கிறார்கள்.   அப்போது மசூதியின் உள்ளே குருவின்  உரை நடந்து கொண்டிருக்கிறது .

ஆக உள்ளூர் மக்களே அவரை இந்திய அரசின் பிரதிநிதியாக பார்கிறார்கள்.      தங்களை இந்தியர்களாக பாவிக்க மறுக்கிறார்கள். அவரும் முஸ்லிம்தானே என்ற உணர்வுகூட அவர்களிடம் அவரிடத்து பரிதாப உணர்வை தரவில்லை.

சட்டமும் ராணுவமும் இன்னும் எத்தனை காலம் அவர்களை கட்டுப் படுத்த முடியும்?

தாராள நிதியுதவி- பன்மடங்கு அரசின் உதவியுடன் எல்லாம் சகாய விலையில். – ஹுரியத் தலைவர்களுக்கு பாதுகாப்பு என்று எத்தனை உதவி செய்தாலும்  மக்களின் மனங்கள்  ஏன் இந்தியாவுடன் இணைய மறுக்கின்றன.

காவல் துறைக்கு  ஆள் எடுத்தால் மனுப்போட்டு குவிகிறார்கள் காஷ்மீர் இளைஞர்கள் .

இந்திய காவல் படைகள் மீது கல்லெறிவது என்பது ஒரு காஷ்மிரிய  பண்பாடு என்று ஆகிவிட்டது.   அவர்களுக்கு பணம் கொடுத்து கல்லெறிய அனுப்புகிறார்கள் என்பது குற்ற சாட்டு.

மக்களின் மனங்களை இணைக்கும் வழிகளை இந்திய அரசு ஆராய வேண்டும்.       துப்பாக்கி தோட்டாக்கள் மட்டுமே அமைதியை கொண்டு வந்து விட முடியாது.

இத்தனை நடந்த பிறகும் ஒரு பொதுமக்கள் கிளர்ச்சி  வெடித்திருக்க வேண்டுமே .      எல்லாம்  அமைதி  காக்கிறார்கள் ///

உள்ளூர்க்காரனை ,    இந்திய அரசின் பிரதிநிதியை   அடித்துக் கொன்றதை  நியாயப் படுத்தும் மக்கள்       எப்படி இந்தியர்கள் ஆவார்கள்? .

\                        என்ன செய்யப் போகிறது இந்திய அரசு?

 

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top