Connect with us

பொய் சொன்னோம் என்று ஒப்புக் கொள்ளும் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராக நீடிக்கலாமா?

தமிழக அரசியல்

பொய் சொன்னோம் என்று ஒப்புக் கொள்ளும் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சராக நீடிக்கலாமா?

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று பேசிய பேச்சு இது :

” அய்யா உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று இட்லி சாப்பிட்டார்கள் சட்னி சாப்பிட்டார்கள் என்று ஏதோ ஒரு பொய்யை சொன்னோம்.  ஆனால் உண்மையிலேயே அதை யாருமே பார்க்க வில்லை . இதுதான் உண்மை.”

” நம்முடைய கட்சியின் ரகசியம் வெளியே பொய் விடக் கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்றைக்கு பொய்களை சொன்னோம். இதுதான்  உண்மை.”

இது மாதிரியான ஆட்களை அமைச்சர்களாக வைத்திருக்கும் நாடு எப்படி உருப்படும்?

நேற்று பேசியது பொய் என்று இன்று பேசும் ஆள்   இன்று பேசியது பொய் என்று நாளை சொல்ல மாட்டார்  என்பது என்ன நிச்சயம்?

நாங்கள் பார்த்தால் ஜெயலலிதா உண்மையை சொல்லி விடுவார் என்று மறைத்தார்கள் என்று சொல்லும் சீனிவாசன்,  வார்டு பாய்கள், நர்சுகள்,    உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்கள் என்று பலரையும் ஜெயலலிதா பார்த்தபோது ஏன் சொல்லியிருக்க கூடாது என்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.?

சி பி ஐ விசாரிக்கட்டும்.    உண்மை வெளிவரட்டும் என்று பலரும் எதிர் பார்க்கிறார்கள்.

சந்தேகங்கள்  பல தீர்க்கப் பட வேண்டியது உள்ளது.    அது வேறு.   ஆனால் கூட இருந்தே அதிகாரத்தில் இருந்த பன்னீர்செல்வமும் , எடப்பாடியும்  மற்றவர்களும் தங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியுமா?

மிரட்டி பணிய வைத்தார்கள் என்றால் நீங்கள் மிரட்டல்களுக்கு  அஞ்சுபவர்கள் என்று ஆகிறது.    இன்று எந்த மிரட்டலுக்கு அஞ்சுகிறீர்களோ?   மிரட்டும் ஆட்கள் தான் மாறி இருப்பார்கள்.    அது பா ஜ க என்று வெளிச்சமாகி விட்டதே?

மொத்தத்தில் ஆளும் அருகதை அற்றவர்கள் நீங்கள் என்பது நிருபிக்கப்  பட்டு  விட்டது.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top