Connect with us

மக்கள் நல கூட்டணியில் இருந்து கம்யுனிஸ்டுகள் விலகலா?

DMDK-Alliance-With-Makkal-Nala-Kootani.jpg

தமிழக அரசியல்

மக்கள் நல கூட்டணியில் இருந்து கம்யுனிஸ்டுகள் விலகலா?

காவிரிப் பிரச்னை தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் காங்கிரசு விவசாய சங்கங்களுடன்  வலது இடது  கம்யுனிஸ்டுகளும்  கலந்து கொண்டிருப்பது மக்கள் ந கூட்டணியில் இருந்து கம்யுனிஸ்டுகள் விலகி விட்டார்களா என்ற கேள்வியைஎழுப்பி இருக்கிறது.

மார்க்சிஸ்ட்  சார்பில் சண்முகமும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் துரைமாணிக்கம் மற்றும் குணசேகரன் கலந்து கொண்டிருக்கிறார்கள். பொது பிரச்சினையில் ஒற்றுமையை காட்டிக் கொள்வது நல்ல விஷயம்தான் .

ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகளும் வைகோவும் ஒப்புதல் கொடுத்தார்களா என்பதுதான் விவாதத்துக்குரியது.

இதற்கெல்லாம் ஒப்புதல் தேவையில்லை என்றால் மற்றவர்களுக்கும் இவர்களின் ஒப்புதல் தேவையில்லை என்றாகிவிடும்.

முதலில் வாசனும் பின்பு விஜயகாந்தும் கழன்று கொண்டது எதிபார்த்ததுதான் .

ஆனால் நாங்கள் ஒன்று பட்டு உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என்றும் ம ந கூ தொடரும் என்றும் அறிவித்தார்கள்.

அதற்குப் பிறகு எந்த பிரச்னை தொடர்பாகவும் பொது நடவடிக்கை எடுத்தார்களா என்பது தெரியவில்லை.  இப்போது காவிரி பிரச்னைதொடர்பாக தி மு க வே மாநில அரசு அனைத்துக்  கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று கோரி வரும் நிலையில் அவர்கள் கூட்டாததால் திமுக கூட்டிய கூட்டத்தில் வலது இடது கம்யுனிஸ்டுகள் கலந்து கொண்டிருக்கிறார்கள் .

வரவேற்க வேண்டிய மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்னும் தெளிவு படுத்தினால் நல்லதல்லவா?!

வைகோவின் வலையில் இருந்து விடுபட்டால் இனி நல்ல நேரம்தான்.

திருமாவளவன் சிந்திக்கட்டும்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top