மதுவிலக்கு கோரி உண்ணா நோன்பிருந்து ஜெய்ப்பூரில் உயிர் துறந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர். !!!! மதுவிலக்கு பற்றி பா ஜ கவினர் இனி எப்படி பேசுவார்கள்???

முன்னாள்  சட்ட மன்ற உறுப்பினர் குருஷரன் சாப்பிரியா என்ற  66 வயதுக்காரர் இரண்டு கோரிக்கைகைளை முன் வைத்தார். ஒன்று மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் இரண்டாவது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப படவேண்டும். 33  நாட்களுக்கு பிறகு அவரது உடல்நிலை சீர்கெட்டு சிகிச்சை பலன் இல்லாமல் உயிர்  இழந்திருக்கிறார். அந்த முதியவரின் போராட்டத்தை முடிவுக்கு  கொண்டு வர மாநில அரசு எந்த உறுப்படியான நடவடிக்கையும் எடுக்க வில்லை. அவரது மகன் சொல்லும்போது மாநில அரசு கொஞ்சம் உணர்வு பூர்வமாக நடந்திருந்தால் என் தந்தை இறந்திருக்க மாட்டார் என்று சொல்கிறார். மதுவிலக்கு அமுல் படுதுத்துகிரார்களோ இல்லையோ மனிதாபிமானம் கூடவா இல்லாமல் போய் விட்டது.??? பா ஜ க அரசின் உண்மை முகம் இதுதானோ?