ராகுல் தவறவிட்ட வாய்ப்பு ! சென்னை வந்தும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பேசாதது ஏன்? குற்ற உணர்வா???

rahul-gandhi
rahul-gandhi
              ஈழக்கனவைத் தகர்த்து பிரபாகரன் படுகொலைக்கு சோனியா ,ராகுல் ,பிரியங்கதான் காரணம் என்றும் ராஜீவ் படுகொலைக்கு நடந்த பழிவாங்கல் ஒண்ணரை லட்சம் தமிழர்களை காவு கொண்டது என்றும் தமிழர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்ட கருத்து.  
                இலங்கைப்போரில்   இந்திய அரசின் பங்கு தொடர்ந்து மறுக்கப் பட்டு வந்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை.    
                கூட்டணி அரசில் பங்கு வகித்ததால் தி மு க வும் அந்தப் பழியில் பங்கு போட நேர்ந்தது;.
                    அகாலிகளுக்கு எதிராக  பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டு பின் அவரை தங்கக் கோவிலுக்குள் கொன்றதால் கொல்லப்பட்டவர் இந்திரா காந்தி. 
                    பழிவாங்குகிறோம் என்று எண்ணாயிரம் சீக்கியர்களை காங்கிரஸ்காரர்கள் கொன்றார்கள். 
                     பின் அதே சீக்கிய இனத்தை சேர்ந்த மன்மோஹனை பிரதமராகவும் ஆக்கினார்கள். 
                    விடுதலைப்புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தவர் இந்திரா.   அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொன்றவர் ராஜிவ்காந்தி.   
                       எந்தவிதத்திலும் ராஜீவ் கொலையை நியாயப்படுத்த முடியாது.        விசாரணையே  முற்றுப் பெறவில்லை.    அது வேறு. .    ஆனால் ஈழத் தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள். ?
                      செய்த குற்றத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற 
உணர்வு  ஏன் வரவில்லை?    
                    போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் நிருபர்கள் கேள்வி கேட்டபோது ,இலங்கை பிரச்சினை ஒரு” ஸ்மால் மேட்டர் ” என்று பதில் அளித்தவர் ராகுல் காந்தி. 
                     சீக்கியர்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு ஒரு நியாயமா? 
                      நடந்தது இருக்கட்டும்.   இலங்கைத்தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப் பாடுபடுவோம் என்று சொல்லக் கூட முடியவில்லையா?   
                     அவசரநிலையை பிரகடனப்படுத்தி ய தற்காக  சென்னைக் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டவர் இந்திராகாந்தி.   
                           குறைந்தது தங்கள் மீது  கூறப்படும் குற்றச்சாட்டு பொய் என்று மறுக்கக் கூட மனமில்லையா?
                       தமிழர்கள் உணர்வு மங்கிப் போனவர்கள் என்ற நினைவு இருந்தால் தவிர இவ்வளவு அலட்சியம் காட்டி இருக்க மாட்டார் ராகுல். 
                      இங்குள்ள தலைவர்களுக்கும் அதைசொல்லிக் கொடுக்க மனமில்லையா?   அல்லது பயமா>?
                        தனி விமானத்தில் வந்தார் பேசினார் சென்றார்!!!!
                       கலைஞர் மதுவிலக்கு பற்றி பேசியதால் புதிய மதுக் கொள்கை கொண்டு வரப படும் என்றார். 
                      எந்தவிளைவையும்  ஏற்படுத்தாமல் எதற்கு வந்தார் என்பதே தெரியவில்லை. 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)