முதல்வர் அலுவலகம் வருவதற்கு போஸ்டர் பேனர்களா ? ஜெயலலிதாவுக்கு நடக்கும் கூத்து தெரியாதா? தடுக்காவிட்டால் நடத்துபவரே அவர்தான் என்றே பொருள்/!!!!!!


            ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சில நாட்களாக செய்திகள் உலவி வருகின்றன.  ஆனால் அரசு அதை உறுதி படுத்த வில்லை.   கலைஞரும்  அவர் ஒய்வெடுத்துகொள்ள அறிவுரை வழங்கி இருந்தார். 
              இந்நிலையில் நேற்று தலைமை செயலகம் வந்தார் ஜெயலலிதா மதியம் மணி 1.07 க்கு.  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட 1006 நபர்களில்  5  பேருக்கு மட்டும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.    பகல் 1.47  க்கு வீடு திரும்பினார் .   அலுவலகத்தில் இருந்தது வெறும்   40    நிமிடங்கள்.  
               இதற்கு காமராஜர் சாலை முழுவதும் வரவேற்பு பேனர்கள் , சங்கத் தலைவர்கள் வரவேற்பு ,வாழ்த்து கோஷங்கள் , கூடுதல் போலீஸ் பாதுகாப்பு. 
                முதல்வர் என்பவர் முதல் பணியாளர் .   அலுவலப் பணி செய்யத்தான் மக்கள் தேர்ந்து எடுத்திருக்கிரார்கள்.      உடல் நிலை சரி இல்லை என்றால் ஓய்வெடுத்துக்கொள்ள முழு உரிமை உண்டு. 
               ஆனால் நாற்பது நிமிடம் பணி செய்வதை கொண்டாட மக்கள் இருப்பது நாட்டுக்கு பெருமை சேர்ப்பது ஆகாது.  இதைவிட அசிங்கம் வேறு இல்லை. 
              ஜாலரா கூட்டங்களை ஒழித்தால்தான் நாடு மேம்படும். 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)