Connect with us

தமிழ் உள்பட எல்லா மொழிகளையும் இந்திக்குள் திணிக்க வேண்டுமாம்!!! மொழிப்பிரச்சினையில் மோடியின் குதர்க்க வாதம்!!! இந்தியை வளர்க்கவா- ஏனைய மொழிகளை அழிக்கவா???

Narendra_Modi

Latest News

தமிழ் உள்பட எல்லா மொழிகளையும் இந்திக்குள் திணிக்க வேண்டுமாம்!!! மொழிப்பிரச்சினையில் மோடியின் குதர்க்க வாதம்!!! இந்தியை வளர்க்கவா- ஏனைய மொழிகளை அழிக்கவா???

                      10  வது இந்தி மொழி மாநாட்டில் போபாலில் பிரதமர் மோடி பேசிய பேச்சு இந்தியாவின் மற்ற மொழிக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.   
                       இந்தியை பரப்பட்டும்.    கோடிகளை கொட்டட்டும்.   இந்தி பிரசார் சபைதான் நாடு முழுதும் இயங்கி வருகிறதே?
                      இந்தியை காப்பாற்றுகிற வேலையில் அதே அக்கறை இந்தியாவின் மற்ற மொழிகளை காப்பாற்றும் கடைமையும் தனக்கு இருக்கிறது என்பதை மறந்து விட்டார். 
                       மற்ற மொழிகளை இந்தியில் புகுத்தி அதை வளப்படுத்துவது என்பது மட்டும்தான் நோக்கம் என்றால் அதில் குறை காண ஏதுமில்லை.     எல்லா மொழிகளும் பிற மொழிகளை தன் மொழியில் புகுத்தி வளப்படுத்திகொள்ள உரிமை உண்டே?
                       ஆங்கிலத்தில் பிற மொழிகள் பல கலக்கப்பட்டு வளப்படுத்தப் பட்டு வருகிறதே!.
                   ஆட்சேபணைக்கு உரிய பல கருத்துகளை மோடி பேசியிருக்கிறார்.   வரும் நாட்களில் சீனம், ஆங்கிலம்  இந்தி மூன்றும்தான் டிஜிட்டல் உலகில் செல்வாக்குடன் விளங்குமாம்.  
தமிழுக்கு அந்த வல்லமை இல்லை என்கிறாரா மோடி?   6   ஆயிரம் மொழிகளில்  90  சத விகித மொழிகள் காணாமல் போய் விடும் என்று மொழி அறிஞர்கள் எச்சரித்திருக்கிறார்கள் என்றும் பேசியிருக்கிறார்.  
                     மொழியை பாதுகாக்கா விட்டால் அழிந்து போய் விடும் என்றவர் அது எல்லா மொழிகளுக்கும் தானே பொருந்தும் என்பதை உணர்ந்தாரா ?
                தமிழ் வங்காளம் போன்ற பிராந்திய மொழிகளை இந்தியில் இறக்குமதி செய்ய வேண்டுமாம்? 
                ENGLISH EVER , HINDI NEVER- என்பதே தமிழர்களின் மொழிக்கொள்கை    தேவைபடுவோர் விரும்புவோர் இந்தியை கற்றுக் கொள்ளட்டும் பிரசார சபை மூலம்.  அவரவர் தேவைக்கேற்ப எந்த மொழிகளையும் தாங்களாகவே கற்றுக் கொள்வார்கள்..
               அரசு முயற்சிஎடுத்தால் அது எல்லா இந்திய மொழிகளுக்கும்தான் இருக்க வேண்டும்.     மத்திய அரசு இந்திக்கு மட்டும் செலவ்ழிப்பதே தவறு.  .  
               எட்டாவது அட்டவணையில் கண்ட எல்லா மொழிகளுக்கும் உரிய மரியாதையை தருவதன் மூலமாக மட்டும்தான் இந்திய ஒற்றுமையை  பாதுகாக்க  முடியும் என்பதை பிரதமர் மோடி உணர்வாரா?
                  தான் இந்தி கற்றுக்கொண்டதை பற்றிப் பேசும் மோடி என்ன சொல்ல வருகிறார்?   நீங்களும் என்னைப்போல ஆக வேண்டும் என்றால் இந்தியை கற்றுக் கொள்ளுங்கள்!!!   இந்தியை கற்றுக் கொள்ளாதவர்கள் பிரதமர் ஆக முடியாது என்றுதானே பொருள்???
                  இந்தி பேசாதவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ முடியும் என்பதை தெளிவாகவே கூறியிருக்கிறார் மோடி. 
               ஒரு பிரதமரின் வேலை நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதா?    பிரிவினை சிந்தனையை தூண்டுவதா???   
                     ஒரே ஒரு வார்த்தை!!!   எந்த இந்திய மொழிகளையும் அழிய விட மட்டும் என்று பேசியிருந்தால் எல்லா மொழிகளுக்கும் மத்திய அரசு பாதுகாப்பு தரும் என்று பேசியிருந்தால் இந்த அச்சம் வந்திருக்காது. 
                      உயர் நீதி மன்றங்களில் அந்தந்த மாநிலமொழிகள் அலுவல் மொழிகளாகட்டும்!!!   எல்லா மட்டத்திலும் மொழிபெயர்ப்பு வசதிகள் பெருகட்டும்!!   இந்திய ஒற்றுமை காக்கப் படும்!      மாறாக பிற  மொழிகள் ஒதுக்கப் பட்டால்  அவர்கள் உங்களை விட்டு ஒதுங்கி விடுவார்கள்!!!   எச்சரிக்கை!!!!!
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top