காவிரிப் பிரச்சினையில் குற்றவாளி மத்திய அரசே!! மேலாண்மை வாரியம் அமைக்க தயங்குவது ஏன் ? பா.ஜ.க. அரசின் இரட்டை நிலை அம்பலம்.!!!

                   05.02.2007 ல் இறுதித் தீர்ப்பு வந்து  20.02.2013  ல் அரசிதழில் வெளியான பின்பு உச்ச நீதி மன்றத்தில் 08.04.2013 ல் தமிழக அரசு மேன்முறையீடு செய்தது.
                      10.05.2013 ல் நடுவர் மன்றம் சொல்லாத காவிரி மேற்பார்வைக் குழுவை உச்ச நீதி மன்றம் அமைக்கிறது.   அதை 03.06.2014 ல் ஜெயலலிதாவும் 14.06.2014 ல் கலைஞரும் ஆட்சேபித்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்கள். 
                      18.11.2014 ல் உச்சநீதி மன்றத்தில் தமிழ் நாடு அரசு மனுப் போடுகிறது.  05.12.2014 ல் தமிழ் நாடு சட்ட மன்றம் ஒருமனதாக தீர்மானம் போட்டு மேலாண்மை வாரியம் அமைக்க கோருகிறது. 
                      இதற்கிடையே கர்நாடக அரசு மேக தாதுவில் அணை கட்ட ரூபாய்  25   கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கிறது.  குடிநீர்த் தேவைக்கென அறிவிக்கப் பட்டாலும்  45  டி.எ,ம்.சி. தண்ணீர் தேக்கும் அளவுக்கான அணை குடிநீர்த் தேவைக்கானது மட்டுமல்ல என்பது தெளிவு.. 
                     காவிரி பாசன விவசாயிகள் சார்பில் நடந்த போது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக தமிழகத்தில் நடைபெற்றது.   எதிர்வினையாக  கர்நாடகத்திலும் அங்குள்ள விவசாயிகள் போராட்டங்களை அறிவித்து பிரச்சினையின் தீவிரத்தை கூட்டியுள்ளார்கள். 
                 03.12.2013 ல் உச்ச நீதிமன்றம்  ஆர்.எம். லோதா  தலைமையில் ஆன பெஞ்சில் உத்தரவிடும்போது  இந்தப் பிரச்சினையில் அவசரம் ஏதும் இல்லை என்றும் மத்திய அரசு தாங்கள் எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்க வில்லை என்று  அவிடவிட்டு தாக்கல் செய்திருப்பதாலும் தாங்கள் ஒரு தற்காலிக ஏற்பாடு செய்திருப்பதால் ( காவிரி மேற்பார்வைக் குழு ) அது பயனளிக்காத போது தாங்கள் எப்போதும் தலையிட முடியும்   என்றும் உத்தரவு பிறப்பித்தது. 
                      பிரச்சினை உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது உண்மை.   இறுதித் தீர்ப்பு உறுதி செய்யப் படலாம் அல்லது சிறிய மாறுதல்களை செய்யலாம்.   இரண்டில் ஒன்றைத் தவிர வேறு மார்க்கம் ஏதும் இல்லை. இரண்டில் எது நடந்தாலும் அந்த தீர்ப்பை நிறைவேற்ற மேலாண்மை வாரியமும் , அதற்குத் துணையாக ஒழுங்குமுறைக்குழுவும் அமைத்தே ஆக வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
                    இந்த நிலையில் மத்திய அரசு செய்ய வேண்டியது என்ன?   மேலாண்மை வாரியமும் ஒழுங்கு முறைக்  குழுவும் அமைக்க வேண்டியது தானே?   அதில் தயக்கம் தாமதம் காட்டுவது ஏன் ?
                    இங்குதான் அரசியல் புகுந்து விளையாடுகிறது.    கர்நாடகத்தில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி.     ஆட்சியை பிடிக்க துடிப்பது பா.ஜ.க.    எனவே கர்நாடக மக்களின் எதிர்ப்பை சந்திக்க பா.ஜ.க. மத்திய அரசு தயாராக இல்லை. 
                      இதைவிட வேறு காரணம் இருக்க வாய்ப்பே இல்லை. சமீபத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்   கர்நாடக அரசிடம் இருந்து அணை கட்ட அனுமதி கோரி எந்த விண்ணப்பமும் பெறப்பட வில்லை என்று அறிவித்திருக்கிறார்.  
                     அது அல்ல முக்கியம்.  அவர்கள் அனுமதி கோறுகிறார்களா அல்லவா என்பது முக்கியம் அல்ல.   எந்த இறுதித் தீர்ப்பாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்கு முறைகுழுவையும் அமைத்து விட்டால் இரு தரப்பும் எழுப்பும் எந்த பிரச்சனையையும் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அந்த அமைப்பிற்கு போய் விடும் அல்லவா?   
                        சந்தேகம் எழுந்தால் அந்த அமைப்பே உச்ச நீதி மன்றத்தில் விளக்கம் கோரிப் பெற்றுக் கொள்ளும் அல்லவா?  
                       பின் ஏன் மத்திய அரசு தயங்க வேண்டும்?   கால தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் ஏற்படுத்தும் எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசே பொறுப்பு!!!       மோடியே பொறுப்பு!!!!
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)