Connect with us

வென்றது பண வெறி?! வீழ்ந்தது தமிழ் மானம்??! தலையெடுக்க முடியுமா தன்மானம்???!!!

Latest News

வென்றது பண வெறி?! வீழ்ந்தது தமிழ் மானம்??! தலையெடுக்க முடியுமா தன்மானம்???!!!

ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்து விட்டார்.      எம்ஜியாருக்குப் பின் தானே மீண்டும் முதல்வராயிருக்கும்போதே வென்றதாக பெருமை பேசுகிறார்.

வாழ்க ஜனநாயகம்!

ஊழல் ஒரு பிரச்சினையாகவே யாரும் பார்க்கவில்லை.

இனிமேல் எல்லாவற்றுக்கும் சட்டப்படியே விலை பேசலாம் என்ற நிலை வரலாம்.

அ தி மு க  40 .8 %    கொண்ட   1,76,03,295  வாக்குகளும்  தி மு க   அணி     39.6 % கொண்ட   1,71,58,539  வாக்குகளும் பெற்று வெறும்   444757  வாக்குகளே குறைவாக பெற்று     1.2% வாக்கு வித்தியாசம் உள்ள முடிவைத் தந்திருக்கிறார்கள்  வாக்காளர்கள்.   ( 226  தொகுதிகளில் )

பின்பு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில்  134  ல் அ தி மு க வும்     89ல் தி மு  க      8 ல் காங்கிரஸ்    1 ல் முஸ்லிம் லீக்    ஆக தி மு க அணியில்    98 ம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரவாகுறிச்சியிலும் தஞ்சையிலும் தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

ஆறாய்ப் பாய்ந்த பணம் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய் விட்டது.

நாம் தமிழர் நான்கரை லட்சம் வாக்குகள் வாங்கி 1.2% பெற்றுள்ளார்.    மதிமுக –  வி சி – வலது இடதுகளைவிட அதிக ஓட்டு சதவிகிதம் பெற்றுள்ளது.

பா.ம.க.   2011  தேர்தலில்     5.23% பெற்று  இப்போது   2016 ல்         5.30 % வாக்குகளை  பெற்று முன்னேறியிருப்பதுடன்    வட மாவட்டங்களில்  88 % வன்னியர் வாக்குகளை பெற்றுள்ளது தெரிகிறது.       எப்படி சாதிக்கட்சி முத்திரை  மாறும்???                   எதிர் காலத்திலும் திராவிட இயக்கங்களுடன் கூட்ட்டணி  இல்லை  என்று அன்புமணி சொல்வது  நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தே மு தி க பத்து லட்சம் வாக்குகள் வாங்கி 2.4% ஆக சுருங்கி மாநில கட்சி அந்தஸ்தையும் இழந்து நிற்கிறது.             அதுதான் ஒரே  ஆறுதல்.

இனி அ தி மு க ,   தி மு க   காங்கிரஸ்   இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற நான்கு கட்சிகளே சட்ட மன்றத்தில் இருக்கும்.      அ தி மு க வின் கூட்டணி கட்சிகளான  மனிதநேய ஜனநாயக கட்சி கொங்கு வேளாளர் கட்சி போன்றவை இரட்டை இலை சின்னத்தில் நின்றதால் தனித் தன்மை கிடையாது.

கொங்கு  மண்டலத்தில்   57  இடங்களில்    47  இடங்களைப் பிடித்து அ தி மு  க வெற்றியை உறுதி செய்தது.

தேர்தல் ஆணையம் பணப் பட்டுவாடாவை  தடுக்க சக்தியற்றுப் போய் விட்டது.

அஞ்சல் வாக்குகளை கணக்கில் எடுக்காமல் முடிவை அறிவித்தது தொடர்பாகவும் இன்னும் சில முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குகள் வரலாம் சில பல முடிவுகள் மாறலாம்.   எதுவும் ஆட்சி அமைவதை தடுக்க முடியாது.

நாம் முன்பே எழுதியதை போல உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பால் ஜெயலலிதாவின் தலையெழுத்தை  மாற்றினால் தவிர மாற்றம் ஏற்பட வழியே இல்லை.

234   சட்ட மன்ற உறுப்பினர்களில்    170   பேர் கோடீஸ்வரர்கள் என்பது இனி யார் யாரெல்லாம் சட்ட மன்றம் போக முடியும் என்பதற்கான முன்னோட்டமாக இருக்கிறது.

அரசியலில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவதை தடுத்தால் தவிர ஜனநாயகம் பிழைக்க வழியில்லை.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top