நல்லபெயரை கெடுத்துக்கொண்ட விஷால்!!! தமிழ் மக்களுடைய பிரச்னைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் அவர்களிடம் வசூல் மட்டும் செய்வோம் என்று சொல்லும் துணிச்சல் எப்படி வந்தது. ???

vishal
விஷால் நல்ல நடிகர்.    நியாயத்துக்காக போராடும் குணம் படைத்தவர் என்பதால்தான் சங்க கட்டடத்தை ஊழல் ஒப்பந்தத்துக்கு உள்ளாக்கிய  சரத்-ராதாரவி தூக்கியெறியப் பட்டார்கள்.அவர் ரெட்டி என்பது எல்லாருக்கும் தெரியும்.   நடிகர்களுக்கு சாதி இல்லை மொழி இல்லை என்பதை தமிழர்கள் உணர்ந்ததால் ராதிகா அவரை சாதி சொல்லி திட்டியபோது யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை.வெற்றி பெற்றதும் நடிகர்களுக்கு நல்லது செய்ய அவர்கள் திட்டமிட்டு வருவது பாராட்டத் தக்கது.    ஆனால் விஷால் காவிரிப் பிரச்னைகெல்லாம் சங்கம் போராடாது என்று சொல்லியது எல்லாரையும் தவறு செய்து விட்டோமோ என்று சிந்திக்க வைத்து விட்டது. தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றாமல் தொடர்ந்து தென்னிந்திய அடைமொழியோடு செயல்படுவது வெறுப்பையும் எதிர்மாறான விளைவுகளையும்தான் ஏற்படுத்தும் என்பதை எல்லா நிர்வாகிகளும் புரிந்து கொண்டால் நல்லது. யாரும் நடிகர்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் தலியிடவேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்க மாட்டார்கள். அடிப்படை வாழ்வாதாரம் போன்ற உணர்வு மிக்க பிரச்சினைகள் பெரிதாகும்போது , அதில் எங்களுக்கு பங்கில்லை என்று அறிவித்தால் எதிர்மாறான விளைவுகள் உண்டாகும் என்பதை நடிகர் சங்கம் குறிப்பாக விஷால்  மனதில் கொண்டால் நல்லது. எனவே மொழி,  இனம் , வாழ்வாதாரம் போன்ற பிரச்சினைகளில் நடிகர்கள் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். நல்லது கெட்டதுகளில் எங்களுக்கு பங்கில்லை என்று யாரும் சொன்னால் உனக்கென்ன இங்கே வேலை என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.