மதம்

குருமூர்த்தி வலையில் வீரமணி விழலாமா??!!

Share

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழ் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவங்கள்.

கடுமையான தண்டனை மட்டுமே இந்த இழிவை போக்கும்.

எல்லாரும் சேர்ந்து ஒரு தீர்வை காண வேண்டிய நேரத்தில் அதை அரசியலாக்குவதோ சந்தடி சாக்கில் எதிரிகளை குறிவைத்து பேசுவதோ மிக மட்டமான செயல்.

அதைத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி செய்திருக்கிறார்.

தனது துக்ளக் இதழில் அதற்கான சதியை அரங்கேற்றுகிறார்.

“தமிழகத்தில் பெண்கள் இழிவு படுத்தப் படுவதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். பெரியார்தான் காரணம். எனவே அவரது கருத்தாக்கத்தை தமிழ்நாட்டில் அகற்றினால்தான் இங்கே பெண்கள் புனர் வாழ்வு பெற முடியும்” என்ற கருத்தில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

அதில் பெரியார் படத்தையும் போட்டிருக்கிறார்.

இது தேர்தல் நேரம். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. திமுக அணி வெற்றி பெறும் சூழல் நிலவுகிறது.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் குருமூர்த்தி கும்பல் சாதி மத சண்டையை தூண்டி விடும் நோக்கில் பெண்கள் இழிவு படுத்தப்பட திராவிட இயக்கங்கள் தான் காரணம் என்றால் திராவிட இயக்கங்கள் இந்து மதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் அதை வைத்து இந்து மத வெறியை தூண்டி அரசியல் ஆதாயம் காணலாம் என்பதுதான் குருமூர்த்தியின் திட்டமாக இருக்க வேண்டும்.

பெரியாரை குருமூர்த்தி இழிவு படுத்திய காரணத்தால் கி.வீரமணி அவர்கள் பதில் சொல்லும் விதத்தில் பெரியார் என்னென்ன சொன்னார் என்பதை பட்டியல் இட்டு யார் பெண்களை இழிவு படுத்துகிறவர்கள் என்பதை மக்களே முடிவு செய்யுங்கள் என்று பேட்டி கொடுக்கிறார்.

கி .வீரமணி சொன்னதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இந்து மத வெறியர்கள்  பெரியாரையும் வீரமணியையும் திராவிட இயக்கத்தையும் தாக்கி மிக மோசமாக பேட்டி கொடுக்கிறார்கள். பதிவு இடுகிறார்கள். அதில் வீரமணியை சாரங்கபாணி கோனார் என்றும் ராமசாமி நாயக்கர், என்றும் அவன் இவன் என்றும் தங்க ள்  தகுதியை வெளிக்காட்டு கிறார்கள்.

இப்படி பேசுகிறவர்கள் மீது வழக்கில்லை. வீரமணி மீது மட்டும் வழக்கு பதிவு செய்கிறது காவல் துறை.

நாடெங்கும் இருக்கும் பெரியார் சிலைகள் அவர்கள் கண்களை உறுத்துகின்றன.

தமிழ்நாட்டில் நிலவும் விழிப்புணர்வு அவர்களை எரிச்சல் அடைய செய்கிறது.

அதனால் எல்லா பார்ப்பனர்களும் ஒன்று  சேர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தி சுய மரியாதை இயக்கத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

வீரமணி மேற்கொள் காட்டியிருக்கும் ஆபாசமான புராண கதைகளில் உள்ளவற்றை படித்துதான் இளைஞர்கள் கெட்டுப் போய் விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வதில் என்ன தவறு? புராணங்களில் ஆபாசம் இருக்கிறதா இல்லையா?

அவற்றை பிறகு பார்ப்போம்.

ஆனாலும் திரு.கி. வீரமணி அவர்கள் இந்த விளக்கத்தை ஒரு பதினைந்து நாட்கள் தள்ளிப் போட்டிருக்கக் கூடாதா? பிறகு வட்டியும் முதலுமாக திருப்பி பிரச்சாரம் செய்திருக்கலாமே?

இப்போது தேவையில்லாமல் மூளைகெட்டுப்போன சில தமிழர்களை வைத்து தமிழர்களுக்குள் பேதம் ஏற்படுத்த ஒரு வாய்ப்பு தந்திருக்க வேண்டாமே?

இதை எதிர்பார்த்து தானே அவர்கள் இந்த ஆயுதத்தை கையில் எடுத்தார்கள்?  தேர்தலுக்காக மெளனமாக இருக்க வேண்டியதில்லை. தகுந்த முறையில் மறுப்பை வெளியிட்டு விட்டு விளக்க கூட்டங்களுக்கு தயார் ஆகி இருக்கலாமே?

புராண கதைகளில் ஆபாசம் உள்ளதா இல்லையா என்பதை அடுத்து பார்ப்போம்??!!

This website uses cookies.