மதம்

சிவன், ஏசு, அல்லா- எவரையும் சிரமப்படுத்தாத நம்பிக்கையாளர்கள்?

Share

அவனன்றி அணுவும் அசையாது – இதுதான் எல்லா கடவுள்   நம்பிக்கையாளர்களின் கருத்தும்.

மனித குலத்தின் அச்சம் பலவீனத்தின் வெளிப்பாடே கடவுள் என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்  கொள்கையை ஏற்கிறவர்கள் அதை மறுப்பார்கள்.

கடவுள் நம்பிக்கைக்கே ஒரு புது வடிவம் / பொருள் கொடுத்திருக்கிறது கொரொனா என்னும் கொடிய வைரஸ்.

இரண்டு லட்சம் பேருக்கு மேல் கொள்ளை கொண்ட கொரோனாவை அனுப்பியது யார் என்பதில் எந்த மதத்தவருக்கும்  இடையில் எந்த தகராறும் இல்லை.

ஏனெனில் எவரும் எங்கள் கடவுள்தான் அனுப்பினார்  என்று  சொல்ல தயாராக இல்லை. எல்லா மதத்தவரும் மாண்டிருக்கிறார்களே !

கொரொனாவை ஒழிக்க யாகம் செய்கிறோம் , தொழுகை செய்கிறோம் ,                        ஜெபிக்கிறோம்  என்றால் கூட செய்யுங்கள் ஆனால் தனியாக வீட்டில் செய்யுங்கள் கோவிலிலோ  சர்ச்சிலோ மசூதியிலோ கூட்டாக வேண்டாம் என்று சொல்கிற நிலையில்தான் அரசும் இருக்கிறது மக்களும் கட்டுப்படுகிறார்கள். 

முடியாது எங்கள் நம்பிக்கை பிரகாரம் நாங்கள் கூட்டாக வழிபாடு செய்வோம் என்று சொல்லக்கூட முடியாத நிலையில்தான் நம்பிக்கையாளர்கள்  இருக்கிறார்கள்.

சொன்னால் சிறைக்குத்தான் போகவேண்டும்.

பிளேக், கால்ரா, அம்மை, சார்ஸ், ஸ்பானிஷ் ப்ளு என்று எத்தனையோ நோய்கள் வந்து போய் விட்டன. ஆனால் கடவுள்களும், மதங்களும், இன்னும் செல்வாக்குடன் தான் இருக்கின்றன என்பது உண்மைதான்.

ஆனால் இன்றைய நிலைமை வேறு. கொரொனா எல்லாவற்றையும் மாற்றி விட்டது. நாளையே கொரோனோ வைரசுக்கு அதில் இருந்தே மருந்து கண்டுபிடித்து விடுவார்கள். குணமானால் கூட இன்னும் பல  ஆண்டுகளுக்கு அதன் தாக்கம் இருக்கும் என்கிறார்கள்.

அது மதம்  சார்ந்த கடவுள்  சித்தாந்தத்தை பலமாக அசைத்து  விடும்.

இறுதியில் வெற்றி பெறப்போவது இயற்கைப் பேராற்றல் , அறம், கடவுள் . அது நம்மைக் காக்கும் வழி காட்டும்.

வள்ளல் பெருமானும் வள்ளுவரும் திருமூலரும் நமக்கு வழிகாட்டிகள்.

சாதி சமய சழக்குகளை ஒழித்தொழிப்போம் ! மதமற்ற ஓரிறை  போற்றுவோம்.

மதங்கள் மாயட்டும். மனங்கள் மாறட்டும்.

This website uses cookies.