Connect with us

கொடியவன் கோட்சேவை தேச பக்தன் என்னும் வஞ்சகர்களை மறவோம்?

gandhi-gotse

மதம்

கொடியவன் கோட்சேவை தேச பக்தன் என்னும் வஞ்சகர்களை மறவோம்?

கொடியவன்  கோட்சே மகாத்மா காந்தியை கொன்ற நாள்.

கோட்சேவை விட கொடியவர்கள் அவனை தேசபக்தன் என்று சொல்பவர்கள்.

அவனது  சகோதரன் கோபால் கோட்சே குற்றவாளி என்று தண்டிக்கப் பட்டு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டு 14 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டான் காங்கிரஸ் அரசால்.

கோட்சேவின் சித்தாந்தத்தை மோடியும் பகிர்ந்து கொள்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் இன்று கோட்சேவின்  சித்தாந்தம் கோலோச்சுகிறது.  ஆனால் பிரதமர் மோடி கோட்சேவை பாராட்டிய தனது கட்சி  எம் பி சாத்வி மகராஜை மன்னிக்க மாட்டேன் என்றார். நடைமுறையில் ஒரு நடவடிக்கையும் இல்லை.

கோட்சேக்கள் எண்ணிக்கை வளர்கிறது. இது ஆபத்தானது.

இந்துக்கள் என்ற போர்வையில் பார்ப்பனீயம் ஆள்கிறது. வன்முறையில் நாட்டம் கொண்டது பார்ப்பனீயம். அதிகாரம் கிடைத்தால் ஆட்டம் போடும். இல்லாத போது வாலை சுருட்டிக் கொண்டு காத்திருக்கும்.

கமல்ஹாசனை கோட்சே ஆதரவாளர் என்று அடையாளம் காட்டியவர் ரஜினிகாந்த்.

கமலை பாராட்டும் சாக்கில் அவர் எடுத்த ஹே ராம் படத்தை நினைவுபடுத்தி எச்சரித்தார். ரஜினி தான் ஓய்வாக இருக்கும்போது மூன்று படங்களை பார்ப்பதாகவும் அவை மார்லன் பிராண்டோ நடித்த காட் பாதர், சிவாஜி நடித்த திருவிளையாடல் அடுத்து கமல் நடித்த ஹேராம் என்றார். அதாவது கமல் அடிப்படையில் கோட்சேவின் சித்தாந்தத்தை ஆதரிப்பவர் என்று பொருள். அந்த படத்தில் கமலின் மனைவியை முஸ்லிம்கள் கற்பழித்து கொலை செய்வார்கள். இந்து முஸ்லிம்கள் கொடூரமாக வன்முறையில்  ஈடுபடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று கமலின் நண்பர் கூறுவார். அவர் காந்தியை  கொல்ல ஒரு துப்பாக்கியையும் கொடுப்பார். கமல் அதை வாங்கிக் கொண்டு காந்தி வரும்போது கையில் வைத்திருப்பார். அதற்குள் கோட்சே காந்தியை கொன்று விடுவான். இதுதான்  கதை..

இப்படி கமலை அடையாளப்படுத்திய கடுப்பில் தான் கமல் ரஜினி ஒரு கன்னடக்காரர் என்றும் ரஜினி தனது  முதலீடுகளை தமிழகத்தில் செய்ய வேண்டும் என்று கூறி ரஜினி கர்நாடகத்தில் முதலீடு செய்திருப்பதை காட்டிக் கொடுத்தார்.

காந்தி நினைவு நாளில் கோட்சேக்களை அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top