ஹரித்வாரில் அவமானப்படுத்த பட்ட திருவள்ளுவர் சிலை ??!! சனாதனிகளுக்கு தமிழர்கள் பதிலடி கொடுக்கும் முன் விழித்துக் கொள் மத்திய அரசே ???!!!!

Share

வள்ளுவரை உயர்த்திப் பிடி என்று யாரையும் தமிழர்கள் கோர வில்லை.     அதற்கு அவசியமும்  இல்லை. தன் மதிப்பால் உயர்ந்து நிற்கும் கோபுரம் அது.

தானாக வந்தார் தருண் விஜய் !   பா ஜ க வின் செல்வாக்கை தமிழகத்தில் பதிய வைக்க ஏஜெண்டாக நியமிக்கப் பட்டதாக வருணிக்கப் படும் பாராளுமன்ற உறுப்பினர்.       நோக்கம் எதுவாக இருந்தாலும் வள்ளுவரையும் குறளையும் வடக்கே கொண்டு செல்ல உறுதி அளிக்கிறாரே அந்தப் பெருந்தன்மைக்கு இங்கே சிலர் பாராட்டு தெரிவித்தார்கள்.    அதில் முதன்மையானவர் வைரமுத்து.

உள்நோக்கத்தை உதறி தள்ளி செயல்பாட்டை மதிக்கும் நோக்கம்.

பெரும்பாலானவர்கள் அதை பொருட் படுத்தவில்லை என்பதே அவரகள் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் உணர்ந்தார்கள் என்பதற்கு விளக்கம்.

ஹரித்வாரில் வள்ளுவரின் 12 அடி உயர சிலை நிறுவப்பட ஹர்கிபவுரி என்ற இடம் தேர்வு செய்யப் பட்டு அதற்கு சாமியார்கள் சிலர் ஆட்செபித்ததை அடுத்து இட மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்சேபணைக்கு காரணம் வள்ளுவர் ஒரு தலித் என்ற பிரச்சாரம்.

வள்ளுவர் தலித்தா இல்லையா என்பது பிரச்சினை இல்லை.    யாராக  இருந்தாலும் அவர் தமிழர்களின் பிம்பம்.   வள்ளுவரை சாதி மதம் பார்த்து உலகம் கொண்டாட வில்லை.

குறளில் எங்குமே மதம் சார்ந்த கருத்துகள் இல்லை.    கடவுள் வாழ்த்தில் கூட எந்த மதத்தின் கடவுளும் இல்லை.

இன்றைக்கு ஹரித்வாரில் புல் தரையில் கிடக்கும் வள்ளுவரின் சிலையைப் பார்த்து   தமிழ் கூறும் நல்லுலகம் நொந்து கிடக்கிறது

நாளையே இது சரிப்படுத்தப் படா விட்டால் சனாதநிகளுக்கு பதிலடி கொடுக்க தமிழர்கள் தயாராவார்கள் .     அது எந்த வடிவம் எடுக்கும் யாரைத் தாக்கும் என்பதை எல்லாம் இப்போது சொல்ல முடியாது.   என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

அது நாட்டு ஒற்றுமைக்கு உலை வைக்கும் வகையிலும் அமையலாம்.

விழித்துக் கொள் மத்திய அரசே??!!!

 

This website uses cookies.