இந்திய அரசியல்

மணி அடிக்க சொன்ன மோடி மணி (பணம்) ஒதுக்க தவறியது ஏன்?

Share

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நாடு மக்களுக்கு கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தனிமைபட்டு இருப்பதனால் ஏற்படும் இழப்புக்ளை அரசு ஏற்றுக்  கொள்ளும் என்றும் அதற்காக  82 பில்லியன் டாலர்களை தனது அரசு ஒதுக்கி உள்ளது என்றும் அறிவித்து தனது நாட்டு மக்களின் பரிதவிப்பை உணர்ந்த தலைவராக தன்னை நினைநாட்டினார்.

நமது பிரதமர் மோடி என்ன செய்திருக்கிறார்.?முதல் பேச்சில் மக்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததுடன் மருத்துவர்கள் செவிலியர்கள் சேவை செய்பவர்களுக்கு நன்றி  பாராட்ட ஐந்து மணிக்கு மணி  அடியுங்கள் என்றார். அதனால் எப்படி  கொரொனா ஒழியும் என்பது வேறு விடயம்.

அடுத்து இன்று உரையாற்றினார் பிரதமர். இன்றாவது ஏதாவது கட்டுப்பாட்டில் சிக்கி  வருவாய் இழக்கும் குடிமக்களுக்கு இழப்பீடு ஏதேனும் அறிவிப்பார் என்று          எதிர்பார்த்தால்  அவர்களுக்கு எதுவும் இல்லை.  மாறாக நோய் எதிர்ப்பு கருவிகள் உபகரணங்கள் இதர தேவைகளுக்கு  ரூ 15000 கோடி  மத்திய அரசு ஒதுக்கும் என்று அறிவித்திருக்கிறார் .   இதனால் பாமரனுக்கு வருவாய் இழந்து வீட்டுக்குள் முடங்கி தவிக்கும் மக்களுக்கு என நிவாரணம்?

மக்களின் தேவைக்கு  இழப்பு அறிவித்த கனடா பிரதமர் எங்கே அவர்களை  கண்டு கொள்ளாத மோடி எங்கே ?

இந்த ஏமாற்றத்தை நம்மால் தாங்கிக்  கொள்ள முடியவில்லை.

ரிசர்வ் வங்கியின் லாபத்தில்  ரூ  170000  கோடியை மத்திய அரசு எடுத்துக் கொண்டது. அதில் இருந்தாவது மக்களுக்கு நிவாரணம் அளிக்க துகை ஒதுக்கி இருக்கலாமே?

மாநில அரசோ தனக்கும் தெரியவில்லை. யார் சொன்னாலும் கேட்பதில்லை.இன்று மாநில அரசு ஒதுக்கி இருக்கும் 3280  கோடி ரூபாய் எந்த விதத்திலும் போதுமானதல்ல.

மத்திய அரசோ அறிவுரையோடு  சரி. பணம் தர மாட்டார்கள். .

இந்த நிலையில் மக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் இன்னும் பொறுப்போடு செயல்படும் நாளை  எதிர்பார்த்து காத்திருப்போம்.

 

This website uses cookies.