இந்திய அரசியல்

நிதிப்பகிர்வில் மத்திய அரசால் வஞ்சிக்கப் படும் தமிழகம்?

Share

தமிழக அரசின் 2020-21 க்கான நிதிநிலை அறிக்கையில், சரியான கணக்கீடுகள் மூலம் போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் 25 வது நிதிக்குழுவின் முன்பு நாம்  தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டிருந்தது.

அது மத்திய  அரசை குற்றம் சாட்டும் வகையில் அமைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் அதையே திமுக தலைவர் முகஸ்டாலின் சுட்டிக் காட்டினால் மறுக்கிறார் நிதி அமைச்சர் ஓ பி எஸ்.

15 வது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதற்கு  நேரடியாக பதில் சொல்ல வில்லை  ஓ பி எஸ்.

முதல் அமைச்சரின் முயற்சியால் நமக்கு 32849  கோடி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று கூறும் ஓ பி எஸ் அது சரியானதுதான் என்று சொல்லாதது ஏன்?

1971 ம்‌ மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே ஒதுக்கீடுகள் செய்யப் பட வேண்டும் என்பது தமிழகக்தின் வாதம். ஏனென்றால் அதற்குபிறகு தமிழக அரசு எடுத்த முயற்சிகள் காரணமாக பிறப்பு  விகிதம் குறைந்ததால் 2011  அடிப்படையில் ஒதுக்கீடு செய்தால் நமக்கு பாதிப்பு உண்டாகும். அதாவது மக்கள் தொகை கட்டுப்பாட்டை திறம்பட நிர்வகித்ததால் நாம் நீதி ஒதுக்கீடில் வஞ்சிக்கப் பட வேண்டுமா?

தமிழக அரசு அப்படி ஒரு  கோரிக்கையை வைத்திருப்பதாக சொல்கிறது. அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பதை சொல்லவில்லை .

14  வது நிதிக்குழு தமிழகத்திற்கு பரிந்துரைத்த நிதி  4.023 % என்றால்   15  வது நிதிக்குழு பரிந்துரைத்திருப்பது   4.189 % என்கிறார் ஓ பி எஸ்.  அதாவது உயர்த்தி      அளித் திருக்கிறது என்பது அவரது வாதம்.

ஆனால் அது சரியானது என்பதை ஒப்புக்கொள்கிறாரா அல்லது  1971 கணக்கெடுப்பின் படி ஒதுக்கினால் இன்னும் அதிகம் கிடைக்கும் என்பதை மறுக்கிறாரா ?

மத்திய அரசு வஞ்சிப்பதை தமிழக அரசு ஏன் மறைக்க வேண்டும். ?

This website uses cookies.