நெல் கொள்முதலுக்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதை நிறுத்த ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இல்லை இல்லை பருப்பு சிறுதானியங்களுக்கு உற்பத்தி ஊக்குவிக்கத்தான் அப்படி கூறினோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விவசாயிகளிடம் வசமாய் சிக்கியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஆதார விலை 2369 ஊக்கத்தொகை 131 சேர்த்தால் 2500 தான் வருகிறது. திமுக, அதிமுக இரண்டும் டன்னுக்கு 3500 தருவோம் என்கிறார்கள். இந்நிலையில் மாநில அரசு தரும் ஊக்கத்தொகையையும் தராதே என்றால் என்றால் எப்படி? நீயும் தர மாட்டாய், கொடுப்பவரையும் தடுப்பாய் என்றால் இது எந்த ஊர் நியாயம் என்று கேட்கிறார்கள் விவசாயிகள்.