கடன் கொள்ளையர்களின் பட்டியலை வெளியிட ரிசர்வ் வங்கி மறுப்பது ஏன் ? உயர் சாதியினர் பலன் பெற்று வருவதாலா?

Share

லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை வங்கிகளில் இருந்து கடனாக பெற்று திருப்பி  தராதவர்களின்  பட்டியலை உச்ச நீதி மன்றம் கேட்டு அதை தாக்கல் செய்த ரிசர்வ் வங்கி அதை வெளியிட வேண்டாம் என்று நீதி மன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

காரணம்; வெளியிட மாட்டோம் என்ற உறுதி மொழி  . மற்றும் அது வெளியிடப்பட்டால்  அது நாட்டின் பொருளாதாரத்தில் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும். .??!!!

சரி பெயர்களைத்தான் வெளியிடவேண்டாம் மொத்த துகை எவ்வளவு என்றாவது சொல்லுங்களேன் என்று உச்சநீதிமன்றம் கேட்டு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.

என்ன நடக்கிறது.?    ரகசியம் காக்க வேண்டிய அவசியம் என்ன?    திருடர்களின் பெயரை வெளியிட மாட்டோம் என்று காவல் துறை ஒப்பந்தம் போடுமா?

வங்கிகளில் கடன் வாங்கி வாழ்பவர்கள் பட்டியலை பார்த்தால் அனைவரும் உயர் சாதி மக்களாகத்தான் இருப்பார்கள்.

ஒன்றிரண்டு சத வீதம் பிற்பட்டோர் தாழ்த்தப் பட்டோர் இருந்தால் அதிசயம்.

இப்படி நாட்டை உறிஞ்சி வாழும் இவர்களுக்காக மற்றவர்கள் உழைக்க வேண்டுமா?

மொத்தத் துகை மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது !   அவர்கள் யார் என்பது அடையாளம் காட்டப்  பட வேண்டும்.

ரகசியம் காக்கப் படும் என்ற ஒப்பந்தம் மோசடியானது சட்டத்திற்கு புறம்பானது என்றும் உச்ச நீதி மன்றம் அறிவிக்க வேண்டும்.

 

This website uses cookies.