Connect with us

சபாஷ் கமல் அய்யர் ! “” சபாஷ் நாயுடு “”” வெற்றி பெற வாழ்த்துக்கள்??!!

sabash naidu

Latest News

சபாஷ் கமல் அய்யர் ! “” சபாஷ் நாயுடு “”” வெற்றி பெற வாழ்த்துக்கள்??!!

தனது புதுப் படத்துக்கு ‘ சபாஷ் நாயுடு ‘ என்று பெயர்  வைத்திருக்கிறார் கமல்ஹாசன் .

சினிமாக்காரர்களுக்கு  எதையாவது செய்து சம்பாதிக்க திட்டமிடுவது ஒன்று புதிதல்ல.

கமல் சிறந்த கலைஞன் என்பதிலோ தன்னை ஆத்திகர் என்று சொல்லிகொள்வதில் பெருமை கொள்பவர் என்பதிலோ  சந்தேகம் இல்லை.

ஆத்திகர் ஏன் மகளுக்கு  ஸ்ருதி என்று வேதம் என்று பொருள் கொள்ளும் பெயரை வைத்தார் என்று யாரும் கேட்கப் போவதில்லை.

முன்பே தமிழகம் சாதி பிரச்னைகளில் சிக்கி தடுமாறிக்கொண்டு இருக்கிறது.தேர்தல் சமயம் அல்லவா?

ஏற்கனவே  தேவர் மகன் என்ற பெயரில் கமல் படம் நடித்ததற்கே ஆட்சேபணை எழுந்தது.

சபாஷ் மீனா என்று படம் எடுத்தால் யார்  கேட்கப்  போகிறார்கள்?

அவரது தசாவதாரம்  படத்தில் நேர்மையான காவல் அதிகாரி பல்ராம் நாயுடு வேடத்தில் அசத்தி இருந்தார் கமல்.    அந்தப் படத்திலேயே நாயுடு வேடம்தான் பலரை ஈர்த்தது.   நாயுடு என்று ஒரு சமூகம் இருப்பது உண்மை.    அதில் ஒரு நேர்மையான அதிகாரி இருக்கிறார் என்று காட்டுவது அந்த சமூகத்துக்கு பெருமைதான்.     மற்றவர்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இருக்க வாய்ப்பே இல்லை.

”  சபாஷ் பல்ராம் நாயுடு ” என்று பெயரிட்டிருந்தால்  எந்த கேள்வியும் எழுந்திருக்காது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பெயரில் படம் அறிவிக்கப் பட்டி ருந்தால்  எந்த உணர்வையும் கிளறியிருக்காது. .

தேர்தல் நேரம் என்பதால்   கிளறி விடப்பட்டிருக்கும் உணர்வுகளை ஓராண்டு கழித்து பணமாக்க கமல்  எண்ணியிருக்கலாம் .

தமிழ்நாட்டை  தமிழன் தான் ஆள வேண்டும் என்ற  குரல்  ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்  வேளையில், விஜயகாந்த்  நாயுடு வாழ்க வெல்க என்று வாழ்த்துகிறாரா கமல் அய்யர்   என்ற கேள்வி எழுவது இயல்புதானே??

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Latest News

To Top