24/08/26 ல் சென்னை உயர்நீதிமன்றம் WP 33101/2026 என்ற வழக்கில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில், கருவறை, விமானம், வேள்வி சாலை மூன்றிலும் சமஸ்கிருதத்தொடு தமிழிலும் ஓதுவார் மூர்த்திகள் ஓதுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டின் எல்லா கோவில்களுக்கும் பொருந்தும் என்றும் விளக்கம் கொடுத்தார். அரசு வழக்கறிஞரும் அதுதான் அரசின் நிலை என்று சொன்னதையும் பதிவு செய்தது. எல்லாருக்கும் எழும் கேள்வி பின் எதற்காக அதே கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தீர்கள்?
தமிழ் பக்தர்கள் எனப்படுபவர்கள் சிந்தித்து எதிர் வினை ஆற்ற வேண்டிய தருணம் இது.